News on Press

எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் செய்தியாளர் சந்திப்பு

6 Nov 2023 | PuthiyathalaimuraiTV

14 வயது சிறுவன் த*கொலை வழக்கு தொடர்பாக எவிடன்ஸ் கதிர் செய்தியாளர் சந்திப்பு

6 Nov 2023 | Thanthi TV

நெல்லை: பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து, கொடூரமாக தாக்கிய விவகாரம் – என்ன நடந்தது?

4 நவம்பர் 2023 | பிபிசி தமிழ்

திருநெல்வேலி மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பட்டியலின இளைஞர்களை ஆதிக்க சாதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் நிர்வாணமாக்கி அவர்கள் மீது சிறுநீர் கழித்து கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவரையும் கைகளைத் தூக்க இயலாத அளவுக்கு மரக்கட்டை மற்றும் கத்தியைத் திருப்பி வைத்து தாக்கியதாக, ஆதிக்க சாதியைச் சேர்ந்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலியில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடக்கக் காரணம் என்ன?

ஆற்றங்கரையில் குளிக்கச் சென்ற பட்டியலின இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்தவர்களிடம் சிக்கியது எப்படி? தோப்பில் வைத்து இளைஞர்களை என்ன செய்தார்கள்?

திருநெல்வேலி மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான பட்டியல் சமூக மக்கள் வசிக்கின்றனர்.

மணி மூர்த்தீஸ்வரம் என்ற பகுதி தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து அரை கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் காலை, மாலை வேளையில் ஆற்றில் குளிப்பது, ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது, துணிகளைத் துவைப்பது போன்ற பணிகளை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரவு நேரங்களில் பணி முடித்து வரும் வழியில் ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்குச் செல்வது வழக்கம்.

அங்கு இரவு நேரத்தில் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆற்றின் கரையில் அமர்ந்து மது, கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதை எடுத்துக் காட்டும் விதமாக ஆற்றின் கரையோரம் முழுவதுமே ஆங்காங்கே மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், குடிநீர் காலி பாட்டில்கள், புகைத்துண்டுகள் கிடந்தன.

நெல்லை பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம்

மணி மூர்த்திஸ்வரத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் மற்றும் அவரது 19 வயது நண்பர் என பட்டியலின இளைஞர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் கேபிள் லைன் கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி மாலை 7 மணி அளவில் ஆற்றங்கரையில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.

அந்த நேரத்தில் ஆற்றின் கரையோரமாக ஆதிக்க சாதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் அமர்ந்து கஞ்சா புகைத்துக் கொண்டு இருந்ததாக இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இவர்கள் குளிக்கச் செல்வதைப் பார்த்த ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் இவர்களை அழைத்து செல்போன்களை பறித்துக்கொண்டு, பணம் கேட்டு மிரட்டியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இருவரையும் வயிற்றில் கத்தியை வைத்துப் பணம் வேண்டுமென மிரட்டியதாகவும் காவல்துறை கூறுகிறது.

பின்னர், “இருவரையும் நிர்வாணப்படுத்தி பட்டியலின இளைஞர்களை அவர்களது முதலாளியிடம் தொலைபேசியில் பேச வைத்து 5000 ரூபாயை இவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கச் செய்து பிறகு ஏ.டி.எம் கார்டை எடுத்துக் கொண்டு இவர்களின் சாதியைக் கேட்டுள்ளனர். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறியதை அடுத்து ஒருவர் மீது சிறுநீர் கழித்து 4 மணிநேரம் வைத்து கொடூரமாகத் தாக்கி இருக்கின்றனர்.

அவர்களிடம் இருந்து தப்பி உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் நிர்வாணமாகவே வீட்டுக்கு ஓடிச்சென்ற இருவரையும் அவர்களது உறவினர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,” என்று காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தச்சநல்லூர் காவல்துறையினர் 6 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம்

இந்த சம்பவத்தில் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கண்பார்வை பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர் அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, “உயிர் பிழைத்தால் போதும் என நிர்வாணமாகவே ஓடினோம்” என்கிறார்.

“நாங்கள் வழக்கமாகப் பணியை முடித்துவிட்டு வரும்போது ஆற்றில் குளிக்கச் செல்வோம். கடந்த அக்டோபர் 30ஆம் தேதி மாலையும் அதேபோல் சென்றோம்.

அப்போது கஞ்சா போதையில் இருந்த 4 பேர் எங்களை அழைத்தனர். அருகில் சென்றபோது எங்களைப் பிடித்து அடித்து செல்போன்களை பறித்துக் கொண்டு எங்களிடம் பணம் கேட்டனர். இல்லை எனக் கூறினோம்.

இதையடுத்து ஆற்றின் கரையில் இருந்து 300 மீட்டருக்கு அப்பால் உள்ள மரத்தில் எங்கள் இருவரையும் தனித்தனியாகக் கட்டி வைத்து நிர்வாணப்படுத்தி அடித்து எங்களின் கேபிள் ஓனருக்கு போன் செய்யச் சொன்னார்கள். நானும் போன் செய்தேன்,” என அன்று நடந்தவற்றை விவரித்தார்.

தாங்கள் மது அருந்தி, போலீஸிடம் சிக்கிக் கொண்டதாகக் கூறி 5,000 ரூபாய் போடச் சொல்லுமாறு கத்தி முனையில் அவர்கள் மிரட்டியதாகவும், உயிருக்குப் பயந்து தானும் அவர்கள் கூறியதை அப்படியே செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர் கூறினார்.

தாங்கள் இருவரும் வந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்தக் கும்பலில் இருந்த இருவர் சென்றனர் என்றும் இருவர் தங்களுக்கு காவலாக இருத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வன்கொடுமைகள் குறித்து, எவிடென்ஸ் கதிர் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி

2 Nov 2023 | Puthiyathalaimurai tv

ஆணவக் கொலையில் அரசு தவறான புள்ளி விவரத்தைக் கொடுக்கிறது.

20 Oct 2023 | Vaanam Social

தோல் சிவப்பா இருந்தால்தான் குரல் கொடுப்பீங்களா.. பெண்ணை இழந்து கதறும் குடும்பம்!

6 Oct 2023 | Nakkheeran TV

Cop gets the stick as ‘friendly’ probe clip of minor suspect in Tirunelveli murder case goes viral

OCT, 06 2023 | THE NEW INDIAN EXPRESS

A constable was suspended for allegedly leaking a video conversation between the police and a juvenile suspect, apprehended for allegedly murdering an 18-year-old SC girl.

Published: 06th October 2023 09:39 AM  |   Last Updated: 06th October 2023 09:41 AM  |  A+A-

A selfie that the sub inspector took with the suspect went viral on social media | Express

By Express News Service

TIRUNELVELI:  A police constable has been placed under suspension for allegedly leaking a video conversation between the police and a juvenile suspect, apprehended for allegedly murdering an 18-year-old SC girl. A selfie that the sub-inspector took with the suspect also went viral on social media.

Deputy Inspector General of Police, Tirunelveli range, Parvesh Kumar confirmed the suspension of the grade-1 constable Jebamani and said the video was taken for internal purposes only. On Monday afternoon, the 17-year-old juvenile allegedly murdered the girl by slitting her throat when she was at a godown of a fancy store, where she was working, near the Nellaiappar temple. The reason for the murder is said to be the girl’s denial to the juvenile’s proposal for a relationship.

The city police alerted Moolakaraipatty police, following which police personnel including inspector Meeral Banu, and SI Sakthi Natarajan nabbed the juvenile. Jebamani allegedly shot two videos during the inquiry. Sakthi Natarajan allegedly took a selfie with the juvenile and the other constable. On Thursday, SP N Silambarasan conducted an inquiry and suspended Jebamani. The provisions of the Juvenile Justice Act and guidelines issued on various court orders for the arrest of the juvenile were discussed during the inquiry, sources said. In the video, the police are seen consoling the juvenile and checking his body for self-inflicted wounds.

Sub-inspector was earlier transferred for similar act
It is to be noted that Sakthi Natarajan was one of the police officials who were transferred to Range Vacancy Reserve from Ambasamudram division after the custodial torture, in which the suspended IPS officer Balveer Singh is prime accused, came to light. At that time, Natarajan was accused of shooting a video of a juvenile victim’s mother, threatening her to talk in favour of the police. The video was later allegedly released by Sakthi Natarajan on social media. Sources said Sakthi Natarajan was rapped for his continuous activities during the inquiry, but no action was taken against him.

‘Treat juvenile suspect in SC girl murder as adult criminal’

MADURAI:  In the wake of the alleged murder of an 18-year-old SC girl at the hands of a 17-year-old caste Hindu stalker in Tirunelveli, executive director of Evidence A Kathir demanded the state to issue a GO ordering a hearing of all cases against juvenile caste Hindus involved in heinous crimes against SC community, in the special court instead of dealing it in the juvenile justice board (JJB).

Kathir said the number of juvenile boys involved in heinous crimes against SCs has gone up. “They get bail easily and are mostly spared from punishments on account of their age. The accused juvenile caste Hindu boys deliberately performed such crimes, including murder and sexual assaults,” Kathir said, adding that the governments, however, have not considered the crime against SCs as heinous crimes.

He further said the government has to consider the crime against SCs by caste hindu juveniles as heinous and hear the case in a special court for exclusive trial cases registered under the SC/ST Act instead of JJB. “The arrest, bail, inquiry, and other procedures have to follow the treatment given for adults. The state has to provide a Rs 25 lakh compensation to the immediate relative of the victim girl. In the girl’s murder, the juvenile must not be provided bail and police must also add a section 354 D IPC in the FIR,” Kathir added.

Family collects body of girl murdered by teen

Oct 6, 2023, 08:58 IST | TIMES OF INDIA

‘A heinous crime should not get diluted just because the attacker is a juvenile’

October 06, 2023 07:42 am IST | The Hindu

In the recent attacks on people belonging to Scheduled Castes (SC), the perpetrators were mostly juveniles. To prevent such crimes, these cases should be treated as heinous and the offenders punished without showing any leniency, said A. Kathir, executive director of Evidence, a Madurai-based organisation.

“After the girl spurned his love, the boy hacked her to death and though he was arrested, he will come out on bail as he is a juvenile”
A. Kathir
Executive director of Evidence, an NGO

Speaking to The Hindu, he said that in the latest attack in Tirunelveli City, a 18-year-old SC girl was targeted by a 17-year-old youth from an intermediate caste. “After the girl spurned his love, the boy hacked her to death in broad daylight on October 2. Though he was arrested, he will certainly come out on bail soon as he is a juvenile,” said.

Such crimes should not be treated as something committed by an adult or a juvenile. The recent pattern of atrocities against the Dalits showed that most of the crimes were committed by youth aged below 18.

A fact-finding team from the Evidence visited Tirunelveli on Wednesday and talked to the parents of the victim. The girl was working in a shop for a meagre salary. She had reasoned with the boy that she cannot marry him since they belonged to different communities. But the youth killed her.

Similar crimes
A teenaged Dalit boy and his younger sister were attacked by their schoolmates in Nanguneri on August 9. Five teenaged boys attacked a Dalit in Kazhugumalai on August 17. A four-member gang attacked a Dalit boy at Kolakaranpatti in Karur district. A 17-year-old Dalit boy was hacked by a juvenile at Ottapidaram on September 2.

The police registered cases, the juveniles obtained bail and sent to borstals.

But, a heinous crime should not get diluted just because the attacker was a juvenile, Mr. Kathir said and added that the government must examine the modalities to amend laws to this effect.

The police should register IPC Section 354 D against the accused in the October-2 murder. The Tamil Nadu government should give a compensation of ₹25 lakh to her family. The juvenile who killed her should not be granted bail.

Besides, all pending cases against Dalits should be taken up and chargesheets filed within a time frame. The cases should be taken up in trial courts and judgments delivered within 100 days, Mr Kathir added.

கரூரில் ஊருக்குள் புகுந்து பட்டியலின மாணவரை தாக்கிய ஆதிக்க சாதி மாணவர்கள் – நடந்தது என்ன?

28 ஆகஸ்ட் 2023 | BBC.COM
பட்டியலின மாணவரை தாக்கிய ஆதிக்க சாதி மாணவர்கள்
படக்குறிப்பு,கரூரில் ஊருக்குள் புகுந்து பட்டியல் சாதி மாணவரை ஆதிக்க சாதி மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • எழுதியவர்,ச.பிரசாந்த்
  • பதவி,பிபிசி தமிழுக்காக

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இரண்டு வாரத்துக்கு முன்பு, 17 வயது பட்டியல் சாதி மாணவரை சாதி ரீதியிலாக வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரையும் அவரது தங்கையையும், சக மாணவர்கள் 6 பேர் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தின் தாக்கம் நீடித்து வருகையில், கரூரில் ஊருக்குள் புகுந்து பட்டியல் சாதி மாணவரை ஆதிக்க சாதி மாணவர்கள் தாக்கிய சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

என்ன நடந்தது கரூரில்?

என்ன நடந்தது கரூரில்?
படக்குறிப்பு,மாணவரின் ஊருக்குள் புகுந்த சில ஆதிக்கச் சாதி மாணவர்கள், மாணவரையும் அவரது பாட்டியையும் தாக்கியுள்ளனர்

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அல்லியாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர், கடந்த, 24 ஆம் தேதி பேருந்தில் பள்ளிக்குச் சென்றுக் கொண்டிருந்தபோது மாணவர்கள் சிலர் தகராறு செய்துள்ளனர். பின்பு 25ம் தேதி அவரது ஊருக்குள் புகுந்த சில ஆதிக்கச் சாதி மாணவர்கள், மாணவரையும் அவரது பாட்டியையும் தாக்கியுள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளியணை போலீஸார், இரு கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளனர். அதேபோல, சட்டத்திற்கு முரண்பட்ட இரண்டு பள்ளி மாணவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரின் பாட்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சொல்வது என்ன?

சிகிச்சையில் உள்ள பாதிக்கப்பட்ட மாணவரின் பாட்டியை தொடர்பு கொண்டு பேசியபோது, ‘‘பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அவரின் சிறுவயதிலேயே இறந்துவிட்டார்கள். நான் தான் அவரை (பாதிக்கப்பட்ட மாணவரை) வளர்த்து வருகிறேன்.

24ம் தேதி வியாக்கிழமை அவர் பள்ளிக்கு செல்லும் சமயத்தில், பேருந்தில் சக மாணவர்களோட பேசி சிரித்து கொண்டு வந்துள்ளார். பின்பு, பேருந்திலிருந்த சில பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், (பாதிக்கப்பட்ட மாணவர்) தங்களை கிண்டல் செய்ததாகக் கூறி, சாதிப்பெயரைச்சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளனர்,’’ என்றார்.

சம்பவம் குறித்து மேலும் தொடர்ந்த அவர், ‘‘பேருந்தில் நடந்தவை குறித்து மாணவர்களிடம் பேசியபோது, அங்கு வந்த போலீஸார், எங்களிடம் நடந்ததைக்கேட்டு அந்த மாணவர்கள் மீது புகார் கொடுக்குமாறு தெரிவித்தனர்” என்றார்.

ஆனால் புகார் கொடுப்பதற்கு முன்பாகவே பாதிக்கப்பட்ட மாணவரின் ஊருக்குள் வந்த ஆதிக்க சாதி மாணவர்கள் அவரை தாக்கியதாகவும் தடுக்க வந்த தன்னையும் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவரின் பாட்டி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதில் மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“முழுமையாக விசாரித்து வருகிறோம்”

“முழுமையாக விசாரித்து வருகிறோம்”

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சாதி வன்கொடுமை, மகளிருக்கு எதிரான வன்கொடுமை, அடிதடி, தகாத வார்த்தைகளால் திட்டியது ஆகிய வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன

இந்த சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கரூர் டவுன் டி.எஸ்.பி சரவணன், ‘‘பாதிக்கப்பட்ட மாணவரை தாக்கிய மாணவர்கள், 15 கிலோ மீட்டர் வரையில் பயணித்து அவரின் கிராமத்துக்கு வந்து தகராறு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்புடைய இருவர் சிறார் என்பதால் சிறார் நீதி வாரியத்தில் ஒப்படைத்துள்ளோம். மீதமுள்ள இரு கல்லூரி மாணவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து வருகிறோம்.

சாதி வன்கொடுமை, மகளிருக்கு எதிரான வன்கொடுமை, அடிதடி, தகாத வார்த்தைகளால் திட்டியது ஆகிய வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன,’’ என்றார்.

பள்ளிகளில் அதிகரிக்கும் சாதிய பிரச்னைகள்

அதிகரிக்கும் சாதிய பிரச்னைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 50 – 60 வழக்குகள் பதிவாகின்றன.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர், ‘‘ஆண்டுதோறும் தமிழகத்தில் சாதிய பாகுபாடு மனநிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பள்ளிக்கு வெளியில் சண்டையிட்டுக்கொள்வது அதிகரித்து வருகிறது.

நாங்கள் செய்த ஆய்வின்படி பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி ரீதியான தகராறு தொடர்பாக, தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு, 50 – 60 வழக்குகள் பதிவாகின்றன. முன்பு நாங்குநேரியில் சாதிய பாகுபாட்டால் மாணவரை, சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியது. தற்போது கரூரில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் தமிழக அரசு மாணவர்களுக்கு சமத்துவம், சாதியத்தால் ஏற்படும் பாதிப்புகள், அடிப்படை மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சாதி ரீதியாக எழும் பிரச்னைகளின் புகார்களை பெற, IAS தலைமையிலான அதிகாரியுடன் தனி குறைதீர்ப்பு அமைப்பும், இலவச சேவை எண்ணும் உருவாக்க வேண்டும்.

தமிழக அரசு முதலில் மாநிலம் முழுவதிலும் பள்ளி, கல்லூரிகளில் ஆய்வு செய்து, சாதி ரீதியான பிரச்னைகள் உள்ள பள்ளி, கல்லூரிகளை அடையாளப்படுத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,’’ என்றார்.

1 3 4 5 6 7 51