News on Press

நான் ஸ்கூலில் பேசினால் சாதி கலவரம் வந்திடுமாம்..

12 Oct 2024 | Neerthirai

பகுத்தறிவு நவராத்திரி”யில் “இடஒதுக்கீட்டை கொண்டாடுவோம்”

12 Oct 2024 | Today Media

பஞ்சமி நிலங்கள் எங்கே- கேள்வியெழுப்பும் பட்டியலின மக்கள்

2 Oct 2024 | PuthiyathalaimuraiTV

தமிழ்நாடு “28 ஆண்டுகளில் 98 பேர் என்கவுன்ட்டர்; இது அரசு அப்பட்டமாக நடத்தும் சட்டவிரோத கொலை

23 Sep 2024, 9:15 pm | PT WEB

எவ்வளவு பெரிய கிரிமினல்களையும் கைது பண்ணுங்கள், வெளிவர முடியாதபடி சிறையில் தள்ளுங்கள், வலுவாக விசாரணை செய்யுங்கள். இங்கு புலனாய்வுத்துறை தோற்றுவிட்டது.

28 ஆண்டுகளில் 98 பேர் என்கவுன்ட்டர்

26 ஆண்டுகள்… 98 பேர் உயிரிழப்பு.. தமிழகத்தில் ரவுடிகள், கொள்கையர்கள், பாலியல் கொடுமை செய்தோர் என கடந்த கால்நூற்றாண்டில் காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டர் வேட்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்கி நிற்கிறது. சென்னையில் மட்டும் 27 ரவுடிகளின் கதை எண்கவுன்டரில் முடிந்து போயுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறையினர், சீசிங் ராஜா

என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறையினர், சீசிங் ராஜாpt web

கடந்த வாரம் காக்காதோப்பு பாலாஜி, தற்போது சீசிங் ராஜா என்கவுன்டரில் கொல்லப்பட்ட நிலையில், என்கவுண்டர் சரியா? தவறா? என்ற விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், என்கவுண்டர் மூலம் சட்டம் ஒழுங்கை சரியாக வைத்திருப்பதுபோல், சமூகத்திற்கு காட்ட காவல்துறை முயற்சி செய்வதாக சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு அப்பட்டமாக நடத்தும் சட்டவிரோத கொலை

புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த அவர் கூறியதாவது, “இது என்கவுன்ட்டர் கிடையாதுங்க. சட்டவிரோத கொலை. மாநில அரசு அப்பட்டமாக நடத்தும் படுகொலை. எத்தனை பெரிய கிரிமினலாக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்திதான் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதைத்தான் சட்டம் சொல்கிறது. ஆனால், காவல்துறையினர், ‘அவர்கள் தாக்க வந்தார்கள். அதனால் சுட்டோம்’ என சொல்கின்றனர்.

கடைசியில் நடந்த இரு படுகொலைகளிலும் கள்ளத்துப்பாக்கி இருக்கிறது என்றார்கள். அப்படியானால் தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் வந்துவிட்டதா? கள்ளத்துப்பாக்கி உங்களது மாநிலத்தில் இருந்தால் அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு ஆணையருக்கு இருக்கிறதுதானே? அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?

புலனாய்வுத்துறை தோற்றுவிட்டது

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் யாரும் தியாகிகள் அல்ல. ஆனால், ஏன் நடக்கிறதென்று பார்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று அரசின் மீது கடும் குற்றச்சாட்டுகள் இருந்தது. இந்த என்கவுன்ட்டர்களின் மூலம் சட்டம் ஒழுங்கை சரியாக வைத்துள்ளோம் என்ற பாவலாவை சமூகத்திற்கு காட்ட முயற்சி செய்கின்றனர். ரவுடிகளுக்கு ரவுடிகளின் மொழியில் பதில் சொல்ல வேண்டுமென்றால் காவல்துறை என்ன ரவுடியா?

என்கவுன்ட்டர்களை தடுக்க வேண்டுமென்றால் இங்கு சட்டத்தின் ஆட்சியும், நீதிமன்றத்தின் ஆட்சியும் நடக்க வேண்டும். எவ்வளவு பெரிய கிரிமினல்களையும் கைது பண்ணுங்கள், வெளிவர முடியாதபடி சிறையில் தள்ளுங்கள், வலுவாக விசாரணை செய்யுங்கள். இங்கு புலனாய்வுத்துறை தோற்றுவிட்டது. அதைத்தான் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்” என தெரிவித்தார்.

ரவுடிகள் மூலம் பதில் சொல்வதென்றால் காவல்துறை என்ன ரவுடியா?

23 Sept 2024 | Puthiyathalaimurai TV

Sivakasi youth’s murder underscores long-standing demand for law on ‘honour killings’

26 Jul 2024, 6:52 pm | TheNewsMinute

Sivakasi youth’s murder underscores long-standing demand for law on ‘honour killings’

Karthik Pandian, a 26-year-old youth from the Asari community, was killed in Tamil Nadu’s Sivakasi by his wife’s brothers and their friend, following a brutal assault on July 24.
Sivakasi youth’s murder underscores long-standing demand for law on ‘honour killings’
Written by:

Edited by:

Karthik Pandian, a 26-year-old youth who hails from the Asari community, was allegedly killed in Tamil Nadu’s Sivakasi by his wife’s brothers and their friend, following a brutal assault on July 24. When the incident happened, Karthik was waiting outside a supermarket near Reserve Line to pick up his wife Nandhini Kumari (22), who was employed there. At around 9 pm, a hamlet clad, bike-borne miscreant, later identified as Siva, rammed into Karthik’s two-wheeler, following which two of Nandini’s brothers joined and assaulted Karthik with a knife and other sharp weapons, leading to his death.

In her police complaint, Nandhini alleged that her family was unhappy with her decision to marry Karthik, who was from a different caste, and had threatened to kill him. “I am from the Thevar community. He is from the Asari community. So my family opposed [our relationship]. Hence, we went to Madurai from our hometown of Sivakasi and got married there,” she wrote in her complaint.
Though both the Asari and Thevar communities are categorised as Backward Classes in Tamil Nadu, Thevars, unlike Asaris, enjoy immense political clout, and present a persistent history of inflicting violence to maintain caste endogamy.

According to the FIR filed by the Thiruthangal police, Karthik and Nandhini got married on November 24, 2023, in Madurai. The couple lived there for a month, during which her brothers Dhanabalamurugan and Balamurugan called Karthik multiple times and threatened to kill him. After Nandhini’s sisters intervened and worked out a truce, the couple moved to a rented house in Sivakasi, their hometown, in December 2023. While Karthik was employed in a workshop, Nandhini worked in a supermarket.

The police has booked Nandhini’s brothers Dhanabalamurugan and Balamurugan, along with their friend Siva who rammed into Karthik’s two wheeler first, under Sections 296(b) (obscene acts and songs) and 103 (punishment for murder) of the Bharatiya Nyaya Sanhita.

This incident has yet again brought forth the demand of anti-caste activists for a special law to prevent crimes in the name of ‘honour’ and punish those who commit such crimes.

Long-standing demand for legislation

The District Superintendent of Police K Feroze Khan Abdullah, in a press release, said that Karthik’s murder cannot be called an ‘honour killing’. “It was their unhappiness with the marriage that led Nandhini’s brothers to murder Karthik. Some people are spreading false information that this is an honour killing. But it is not. Both of them belong to the same community,” the release read.

Responding to this, A Kathir, the founder-director of the rights-based organisation Evidence, told TNM that we cannot negate caste-based honour, which is a primary motivation in this case for the murder. “They technically belong to two communities, though both fall under the BC category. There is a caste difference here, which the police have to understand. This is why we are demanding for a special law which will take into consideration nuances like these,” Kathir pointed out.

In 2022, a 17-page draft Bill titled ‘The Freedom of Marriage and Association and Prohibition of Crimes in the Name of Honour Act 2022’ was drafted by the Dalit Human Rights Defender Network, a coalition of anti-caste activists and organisations in 2022, and handed over to Tamil Nadu Chief Minister MK Stalin. The Bill intends to “provide justice, compensation and rehabilitation in crimes committed in the name of honour vis-a-vis caste, faith, age, gender, sexual orientation, language, class, race, status and tradition”.

Kathir, who is also the head of the coalition, said that such a Bill is necessary to compliment the Prevention of Atrocities Against Scheduled Castes/Scheduled Tribes Act, to handle issues that don’t involve Dalits.

“In the case of inter-caste marriages like Karthik and Nandhini’s, both the victim and perpetrators are from the same caste, so their murders cannot be charged under the Atrocities Act. But in this instance, clearly there is a caste-pride which served as the motivator for the crime. Also, patriarchy robbed Nandhini of her right to choose a partner and she was punished for her choices. We need a law that would take these factors into consideration,” he said.

என்*கவுன்டர் தீர்வல்ல ! பின்னனியில் ஆருத்ரா மட்டுமல்ல நீளும் பட்டியல்..!

15 Jul 2024 | ARAKALAGAM TV

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் கொலைகள் – 7 நாள் விரிவான கள ஆய்வு – சொல்வது என்ன।

July 12 2024 | Angusam

சாதி ஆணவக் கொலைகளை தற்போதைய சட்டங்களால் தடுக்க முடியாதது ஏன்?

4 ஜூலை 2024 | பிபிசி தமிழ்
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க நடப்பிலுள்ள சட்டங்கள் போதுமானவையா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சாதிய வன்கொடுமையாக அமைந்த ஆணவக் கொலைகளாக இருந்தாலும் கூட சில நேரங்களில் எஸ்சி/எஸ் டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாது.

  • எழுதியவர்,சாரதா வி
  • பதவி,பிபிசி தமிழ்

சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கைக்கு சட்டமன்றத்தில் பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நடைமுறையில் உள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படையில் தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து, முதல்வரின் கருத்தை விமர்சித்தும், ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கோரியும் குரல்கள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன. நடைமுறையில் உள்ள சட்டங்களால் ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியாதது ஏன்?

ஆங்கிலத்தில் ‘Honour Killings’ என அழைக்கப்படும் கொலைகள், பெரும்பாலும் சொந்த குடும்பத்தாராலேயே, கெளரவத்திற்கு இழுக்கு நிகழ்ந்ததாக கருதி இழைக்கப்படும் கொலைக் குற்றங்கள் ஆகும்.

இந்தியாவில் இந்தக் குற்றங்களுக்கு பெரும்பாலும் சாதி தான் குறிப்பான காரணியாக உள்ளது. எனவே, சாதி எதிர்ப்பில் உறுதியான இயக்கங்கள் இந்தக் கொலைகளை ‘சாதி ஆணவக் கொலைகள்’ என்றே பெயரிட்டு அழைக்கின்றனர்.

இத்தகைய ஆணவக் கொலைகளில் ஈடுபடுவது கொலையானவரின் குடும்பத்தாராக இருப்பதாலும், உறவினர்கள், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் மற்றும் சாதி அமைப்புகள் கூட்டுச் சதியில் ஈடுபடுவதாலும் அரசு இந்த வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வழக்குகளில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்களை நியமனம் செய்வதாக அரசு உறுதி கூறினாலும், நடப்பில் உள்ள சட்டங்களின் போதாமையை செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, சாதிய வன்கொடுமையாக அமைந்த ஆணவக் கொலைகளாக இருந்தாலும் கூட கீழே குறிப்பிட்டது போன்ற சில நேரங்களில் எஸ்சி/எஸ் டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாது.

1. திருமணம் செய்துகொண்ட ஆண் – பெண் இருவரும் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் எனில், இருவரோ அல்லது இருவரில் ஒருவரோ கொல்லப்பட்டால்.

2. ஆண் -பெண் இருவரும் பட்டியல்/பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், ஆணவக்கொலை நடந்தால்.

3. இணையரில் ஒருவர் பிற்பட்ட சாதியாக இருந்து, சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும்போது, அந்த இணையரில் பட்டியல் சாதியினராகவோ/பழங்குடியினராகவோ இல்லாத ஒருவர் கொலை செய்யப்பட்டால்.

ஐ.பி.சி 302 மட்டும் போதுமா?

இந்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், பட்டியல் சாதி இளைஞரும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.

“அந்த பெண்ணை அவரது தந்தையே மரத்தில் தூக்கிட்டு தொங்கவிட்டு, கொன்றுள்ளார். மிகுந்த அச்சமுற்ற பெண்ணின் கணவன், காவல்நிலையத்திற்கு சென்று வழக்குத் தொடுக்கவே ஒரு வாரம் ஆகிவிட்டது. அதன் பின்னர் தான் இந்தக் கொலை நடந்த விபரமே வெளிச்சத்திற்கு வந்தது. அது வரை அந்த ஊரில் இருந்தவர்களுக்கு இப்படியொரு குற்றம் நடந்தது தெரியும் தானே?. ஆனாலும் ஏன் எந்த புகாரும் எழவில்லை” என்று குறிப்பிடும் எவிடன்ஸ் அமைப்பின் கதிர்,

“இந்த வழக்கில் எஸ் சி எஸ் டி சட்டம் பொருந்தாது. இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் கொலை வழக்காகத்தான் பதிவு செய்ய வேண்டும். ஆனால், இந்த வழக்கினை இரண்டு நபர்களுக்கு இடையிலான தகராறு காரணமாக நடைபெற்ற கொலை என்று மட்டும் பார்க்க முடியுமா? கொலை செய்த நபரை ஒரு ஊரே காப்பாற்றுகிறது. இதை எப்படி ஐ.பி.சி 302-ன் கீழ் கையாண்டு உரிய நியாயம் வழங்க முடியும்” என கேட்கிறார்.

ஆணவக் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களாகவும் இருப்பதால், பெண் வீட்டாரே பெரும்பாலும் ஆணவக் கொலையில் ஈடுபடுகின்றனர். பட்டியல்/பழங்குடியை சேர்ந்த ஒரு இணையரை பெண் தேர்வு செய்துவிட்டார் என்பதை குடும்பங்கள் அவமானமாக கருதுகின்றனர். அதன் காரணமாக இந்த பெண்கள் கொல்லப்படுகிறார்கள். குற்றத்தின் அடிப்படை சாதி வன்கொடுமையாக இருக்கும்போது, கொல்லப்பட்டவரின் சாதிப் பின்னணியை மட்டும் வைத்து வழக்குகள் பதியப்படுவதாக செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாநில SC/ST ஆணையம் இதுவரை என்ன செஞ்சு இருக்கு? | குற்றங்கள் எண்ணிக்கையை குறைத்து காட்டுது அரசு

2 Jul 2024 | Tamilmint
1 2 3 7