News on Press

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் கொலைகள் – 7 நாள் விரிவான கள ஆய்வு – சொல்வது என்ன।

July 12 2024 | Angusam

சாதி ஆணவக் கொலைகளை தற்போதைய சட்டங்களால் தடுக்க முடியாதது ஏன்?

4 ஜூலை 2024 | பிபிசி தமிழ்
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க நடப்பிலுள்ள சட்டங்கள் போதுமானவையா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சாதிய வன்கொடுமையாக அமைந்த ஆணவக் கொலைகளாக இருந்தாலும் கூட சில நேரங்களில் எஸ்சி/எஸ் டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாது.

  • எழுதியவர்,சாரதா வி
  • பதவி,பிபிசி தமிழ்

சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கைக்கு சட்டமன்றத்தில் பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நடைமுறையில் உள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படையில் தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து, முதல்வரின் கருத்தை விமர்சித்தும், ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கோரியும் குரல்கள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன. நடைமுறையில் உள்ள சட்டங்களால் ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியாதது ஏன்?

ஆங்கிலத்தில் ‘Honour Killings’ என அழைக்கப்படும் கொலைகள், பெரும்பாலும் சொந்த குடும்பத்தாராலேயே, கெளரவத்திற்கு இழுக்கு நிகழ்ந்ததாக கருதி இழைக்கப்படும் கொலைக் குற்றங்கள் ஆகும்.

இந்தியாவில் இந்தக் குற்றங்களுக்கு பெரும்பாலும் சாதி தான் குறிப்பான காரணியாக உள்ளது. எனவே, சாதி எதிர்ப்பில் உறுதியான இயக்கங்கள் இந்தக் கொலைகளை ‘சாதி ஆணவக் கொலைகள்’ என்றே பெயரிட்டு அழைக்கின்றனர்.

இத்தகைய ஆணவக் கொலைகளில் ஈடுபடுவது கொலையானவரின் குடும்பத்தாராக இருப்பதாலும், உறவினர்கள், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் மற்றும் சாதி அமைப்புகள் கூட்டுச் சதியில் ஈடுபடுவதாலும் அரசு இந்த வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வழக்குகளில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்களை நியமனம் செய்வதாக அரசு உறுதி கூறினாலும், நடப்பில் உள்ள சட்டங்களின் போதாமையை செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, சாதிய வன்கொடுமையாக அமைந்த ஆணவக் கொலைகளாக இருந்தாலும் கூட கீழே குறிப்பிட்டது போன்ற சில நேரங்களில் எஸ்சி/எஸ் டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாது.

1. திருமணம் செய்துகொண்ட ஆண் – பெண் இருவரும் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் எனில், இருவரோ அல்லது இருவரில் ஒருவரோ கொல்லப்பட்டால்.

2. ஆண் -பெண் இருவரும் பட்டியல்/பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், ஆணவக்கொலை நடந்தால்.

3. இணையரில் ஒருவர் பிற்பட்ட சாதியாக இருந்து, சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும்போது, அந்த இணையரில் பட்டியல் சாதியினராகவோ/பழங்குடியினராகவோ இல்லாத ஒருவர் கொலை செய்யப்பட்டால்.

ஐ.பி.சி 302 மட்டும் போதுமா?

இந்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், பட்டியல் சாதி இளைஞரும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.

“அந்த பெண்ணை அவரது தந்தையே மரத்தில் தூக்கிட்டு தொங்கவிட்டு, கொன்றுள்ளார். மிகுந்த அச்சமுற்ற பெண்ணின் கணவன், காவல்நிலையத்திற்கு சென்று வழக்குத் தொடுக்கவே ஒரு வாரம் ஆகிவிட்டது. அதன் பின்னர் தான் இந்தக் கொலை நடந்த விபரமே வெளிச்சத்திற்கு வந்தது. அது வரை அந்த ஊரில் இருந்தவர்களுக்கு இப்படியொரு குற்றம் நடந்தது தெரியும் தானே?. ஆனாலும் ஏன் எந்த புகாரும் எழவில்லை” என்று குறிப்பிடும் எவிடன்ஸ் அமைப்பின் கதிர்,

“இந்த வழக்கில் எஸ் சி எஸ் டி சட்டம் பொருந்தாது. இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் கொலை வழக்காகத்தான் பதிவு செய்ய வேண்டும். ஆனால், இந்த வழக்கினை இரண்டு நபர்களுக்கு இடையிலான தகராறு காரணமாக நடைபெற்ற கொலை என்று மட்டும் பார்க்க முடியுமா? கொலை செய்த நபரை ஒரு ஊரே காப்பாற்றுகிறது. இதை எப்படி ஐ.பி.சி 302-ன் கீழ் கையாண்டு உரிய நியாயம் வழங்க முடியும்” என கேட்கிறார்.

ஆணவக் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களாகவும் இருப்பதால், பெண் வீட்டாரே பெரும்பாலும் ஆணவக் கொலையில் ஈடுபடுகின்றனர். பட்டியல்/பழங்குடியை சேர்ந்த ஒரு இணையரை பெண் தேர்வு செய்துவிட்டார் என்பதை குடும்பங்கள் அவமானமாக கருதுகின்றனர். அதன் காரணமாக இந்த பெண்கள் கொல்லப்படுகிறார்கள். குற்றத்தின் அடிப்படை சாதி வன்கொடுமையாக இருக்கும்போது, கொல்லப்பட்டவரின் சாதிப் பின்னணியை மட்டும் வைத்து வழக்குகள் பதியப்படுவதாக செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாநில SC/ST ஆணையம் இதுவரை என்ன செஞ்சு இருக்கு? | குற்றங்கள் எண்ணிக்கையை குறைத்து காட்டுது அரசு

2 Jul 2024 | Tamilmint

‘முற்போக்கான’ தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகள், தாக்குதல்கள் தொடருவது ஏன்?

28 ஜூன் 2024 | பிபிசி தமிழ்

காதல் திருமணம் செய்து வைத்ததற்காக சில நாட்களுக்கு முன்பாக திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பாக சென்னையிலேயே ஒரு ஆணவக் கொலை நடைபெற்றது. இந்த வாரம் மதுரையில் ஒரு ஆணவக் கொலை நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக் காரணம் என்ன?

விருதுநகர் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த அழகேந்திரன் என்ற இளைஞர் தான் வசிக்கும் பகுதியில் பட்டியலினத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் 24ஆம் தேதி மதுரைக்குத் தன் உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு அழகேந்திரன் சென்றிருக்கிறார்.

பிறகு தலை துண்டிக்கப்பட்ட அவரது சடலம் மதுரை வேளான்பூர் கண்மாய் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. உறவினரின் வீட்டிற்கு வந்த அவரை, பெண்ணின் சகோதரரான பிரபாகரன் அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டதாக அந்த இளைஞரின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இப்போது பிரபாகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

காதல் திருமணம் செய்தவர்கள் ‘குற்ற வரி’ செலுத்தாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கும் தமிழ்நாட்டு கிராமம் – பிபிசி கள ஆய்வு

அடித்து நொறுக்கப்பட்ட சிபிஎம் அலுவலகம்
தமிழ்நாட்டில் தொடரும் ஆணவக் கொலைகள், ஆணவத் தாக்குதல்கள், காரணம் என்ன?பட மூலாதாரம்,TIRUNELVELI CPM
படக்குறிப்பு,காதல் திருமணத்திற்கு ஆதரவாக இருந்ததற்காக அடித்து நொறுக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்.
இதற்கு முன்பாக, காதல் திருமணத்திற்கு ஆதரவாக இருந்ததற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த உதயதாட்சாயிணி என்ற பெண்ணும் பாளையங்கோட்டை நம்பிக்கைபுரம் பகுதியைச் சேர்ந்த மதன் என்ற இளைஞரும் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வந்தனர்.

இதில் மதன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், உதயதாட்சாயிணி தரப்பில் இந்தக் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் ஜூன் 13ஆம் தேதி திருமணம் செய்தனர். ஜூன் 14ஆம் தேதி அந்தத் திருமணத்தைப் பதிவு செய்ய நினைத்திருந்தனர்.

இதை பெண் வீட்டார் தடுக்கலாம் என்பதால் திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை அணுகினர். இதனால், காவல்துறை பாதுகாப்போடு திருமணத்தைப் பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சிகளை மேற்கொண்டது.

இந்த நிலையில், பெண் வீட்டார், அவர்களது உறவினர்கள், இவர்களது சாதியைச் சேர்ந்த பந்தல் ராஜா, அவருடைய ஆதரவாளர்கள் ஆகியோர் திருநெல்வேலி வினோபா நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த மேசை, நாற்காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். இதைத் தடுக்க முயன்ற கட்சியினர் சிலரும் தாக்குதலுக்கு உள்ளாயினர்.

காதல் திருமணத்திற்காக ஒரு கட்சியின் அலுவலகம், ஒரு சிறிய சாதி அமைப்பைச் சேர்ந்தவர்களால் அடித்து நொறுக்கப்பட்டது மாநிலத்தையே அதிர வைத்தது. கல்லூரிகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கையை அதிகமாகக் கொண்ட மாநிலம், அதிக அளவில் பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலம் எனப் பொதுவாகவே முற்போக்கான மாநிலமாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன.

தமிழ்நாட்டில் தொடரும் ஆணவக் கொலைகள், ஆணவத் தாக்குதல்கள், காரணம் என்ன?பட மூலாதாரம்,TIRUNELVELI CPM
படக்குறிப்பு,காதல் திருமணத்திற்காக ஒரு கட்சியின் அலுவலகம், ஒரு சிறிய சாதி அமைப்பைச் சேர்ந்தவர்களால் அடித்து நொறுக்கப்பட்டது மாநிலத்தையே அதிர வைத்தது.
“தமிழ்நாட்டில் நாம் நினைப்பதைப் போல சாதி மறுப்புத் திருமணங்கள் அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. திருநெல்வேலியில் நடந்த சம்பவம் இதற்கு ஓர் உதாரணம். இதுபோன்ற திருமணங்களைத் தடுக்க எந்த எல்லைக்கும், அதாவது கொலை செய்யும் எல்லைக்கும் போக இவர்கள் தயாராக இருக்கிறார்கள்” என்கிறார் தாக்குதல் நடந்த நேரத்தில் அலுவலகத்தில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரான கே.ஜி. பாஸ்கரன்.

சாதிக்கு வெளியில் காதலித்து, திருமணம் செய்பவர்கள் பாதுகாப்பு கேட்டால், பாதுகாப்பு அளிப்பதாக அரசு சொல்கிறது, ஆனால், அப்படி ஏதும் நடப்பதில்லை என்கிறார் பாஸ்கரன்.

இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து ஜூன் 26ஆம் தேதி வரை, 7 ஆணவக் கொலை சம்பவங்கள் நடந்திருப்பதாகச் சொல்கிறது மதுரையிலிருந்து செயல்படும் எவிடன்ஸ் அமைப்பு அளிக்கும் புள்ளிவிவரம்.

கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சாதி மறுப்புத் திருமணங்கள் தொடர்பான மனநிலை மாறாமல் இருப்பதையே இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன என்கிறார் மதுரையிலிருந்து செயல்படும் ‘எவிடன்ஸ்’ அமைப்பின் கதிர்.

“கடந்த 2004ஆம் ஆண்டில் நிலக்கோட்டைக்கு அருகிலுள்ள ஊர் ஒன்றில் பெண் ஒருவர் வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்ததற்காக ஊர் நடுவில் ஒரு மரத்தில் நாயைக் கட்டும் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டார். அதற்குப் பிறகு ஊரில் பணம் வசூலித்து, ஒரு தண்ணீர் லாரியைக் கொண்டு வந்து அதில் மஞ்சளைக் கலந்து ஊரையே கழுவிவிட்டார்கள்.மூன்று நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண் கொலை செய்யப்பட்டார்.” என்கிறார் கதிர்.

மேலும் தொடர்ந்த அவர், “இந்த ஆண்டு துவக்கத்தில் பட்டுக்கோட்டை மாவட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்தார் என்பதற்காக, தந்தையே அந்தப் பெண்ணை ஒரு மரத்தில் தூக்கில் மாட்டிக் கொலை செய்தார். இது ஊரே பார்க்க நடந்தது. முதல் கொலைக்கும் இரண்டாவது கொலைக்கும் இடையில் இருபது ஆண்டுகள் கால இடைவெளி இருக்கிறது. ஆனால், எதுவும் மாறவில்லை” என்கிறார் கதிர்.

`விஷச்சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்…’ – கள ஆய்வறிக்கை வெளியிட்ட எவிடென்ஸ் கதிர்!

28 Jun 2024 6 PM | Vikatan

நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்த கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் குறித்து, மதுரையிலுள்ள எவிடன்ஸ் அமைப்பு கள ஆய்வு மேற்கொண்டது. அதன் ஆய்வறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய எவிடென்ஸ் செயல் இயக்குநர் கதிர், “கள்ளக்குறிச்சி விஷச் சாராயத்தால் 64-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் உயரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் 211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மரக்காணத்தில் 22 பேர் உயிரிழந்தபோது அங்கு சென்ற முதலமைச்சர், `கள்ளச்சாராயம் இனி ஒரு சொட்டுகூட விற்காது’ என கூறினார். ஆனால், இப்போது கள்ளச்சாராய விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், மாதர்சேரி ஆகிய பகுதிகளில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டோம். கருணாபுரத்தில் காவல் நிலையம், நீதிமன்றம், கலெக்டர் ஆபிஸ் அருகிலேயே விஷச் சாராய விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் அரசு நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளதால், விஷச் சாராய மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்.

மருத்துவமனையில் ரெட் ஜோன் மற்றும் டார்க் ஜோன் வார்டுகளில் அதிக பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழப்புகள் அதிகரிப்பை தாமதமாக அறிவித்து மக்களை திசை திருப்புகின்றனர்.

இதில் பட்டியலினத்தவர்கள் அதிகம் இறந்துள்ளனர். இறந்த பெண்கள் குறைந்த வயதுடையவர்களாக உள்ளனர். 54 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கோண்டோம். விஷச் சாராயத்தில் உயிரிழந்தவர்களில், 28 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். இதில் 11 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் மொத்த வியாபாரியிடமிருந்து சில்லறை வியாபாரிகளுக்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு பாக்கெட் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாள்தோறும் காவல்துறையினர் லஞ்சம் வாங்கி சென்றுள்ளனர். 18-ம் தேதியே கள்ளச்சாராயம் அருந்தி இருவர் இறந்துள்ளனர். ஆனால் அப்போது கள்ளச்சாராய மரணம் இல்லை என்று கலெக்டர் மறுத்துள்ளார். தலித் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளை குறிவைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களும் கள்ளச்சாராயம் குடித்து வருகின்றனர். 18-ம் தேதி விஷச் சாராயம் அருந்திய இளைஞர் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது சிகிச்சை அளிக்க முடியாது என கூறி அனுப்பியுள்ளனர். இல்லம் தேடி கல்வி என்பதை மறந்து இல்லம் தேடி சாராயம் என்பதுபோல் மாறிவிட்டது தமிழ்நாடு.

உளவுத்துறைக்கு கள்ளச்சாராய விற்பனை குறித்து தெரியாதா? கள்ளச்சாராயம் விற்பனை குறித்து புகார் அளித்தால், புகார்தாரரை வீடு தேடிவந்து புகார் மனுவை காண்பித்து மிரட்டிச் செல்லும் வகையில் முதலமைச்சரின் கீழுள்ள காவல்துறை செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசு கள்ளச்சாராய மரணத்தில் தோற்றுபோய்விட்டது, அரசின் இயலாமை, மரணத்திற்கு பொறுப்பு என்பதற்காகத்தான் 10 லட்சம் இழப்பீட்டுத் தொகை அளித்துள்ளனர்.
கள்ளச்சாராய மரண விவகாரத்தில் எஸ்.சி-எஸ்.டி பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்ய முடியாது என எஸ்.சி-எஸ்.டி மாநில ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது பல ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு சொட்டு சாராயம் விற்பனை ஆகாது என முதலமைச்சர் கூறிய நிலையில் எப்படி விற்பனை நடந்தது? எவிடென்ஸ் அமைப்பு கள ஆய்வுக்கு சென்றபோது மருத்துவமனை ஐ.சி.யூ வார்டுக்குள் அனுமதிக்கவில்லை. மரண விவரம் முழுமையாக தெரிந்துவிடும் என்பதால் அனுமதிக்கவில்லை, ஊடகத்தினரையும் மருத்துவமனைக்குள் அனுமதிப்பதில்லை, எங்கள் குழுவை காவல்துறையினர் பின் தொடர்ந்தனர்.

எங்களை தடுக்க இரண்டு எம்.எல்.ஏ-க்கள், ஒரு அமைச்சர் மூலம் உத்தரவு வந்துள்ளதாக சொல்லப்பட்டது. கள்ளச்சாராய மரண விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும், சிபிசிஐடி விசாரணை வெளிப்படையாக இருக்காது, காவல்துறையை காட்டிக்கொடுக்க மாட்டார்கள். சிபிஐ விசாரணையையும் நம்ப முடியாது.

ஆதி திராவிட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை விட 10 மடங்கு அதிகமாக மதுபான விற்பனை உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.45,862 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளது.

கள்ளச்சாராய விவகாரத்தில் இறந்தவர்களுக்கு 25 லட்சம் வழங்க வேண்டும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை ஏன் துறைக்கு சம்பந்தம் இல்லாத அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்?

உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வி உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், ஒவ்வொரு ஊராட்சியையும் கள்ளச்சாராய விற்பனை தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும், விஷச் சாராய உயிரிழப்பு விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.

கள்ளச்சாராய விவகாரத்தில் இரண்டு எம்.எல்.ஏ- க்களின் தொடர்பு குறித்து கள ஆய்வின்போது பொதுமக்கள் தெரிவித்தார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஒரு நபர் கமிஷன், சிபிசிஐடி விசாரணை, இழப்பீட்டுத் தொகை என கூறி ஏமாற்றிவிடுவார்கள். அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த மரணம் நடந்துள்ளது. இதனை மனித உரிமை ஆணையம், நிச்சயமாக நேரில் விசாரணை நடத்த வேண்டும், தமிழகத்தின் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் முழுமையாக இல்லவே இல்லை என்ற நிலைதான் உள்ளது.

தமிழகத்தில் ஆணவப் படுகொலை சட்டம் தேவையில்லை என்றார் முதலமைச்சர். ஆனால் மதுரையில் பட்டியலின பிரிவுகள் இடையே ஒரு இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும் என்றார். ஆனால் இப்போது வேண்டாம் என்கிறார். கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ஏன் முதலமைச்சர் சந்திக்கவில்லை? அரசியலுக்காக டெல்லி செல்லும் முதலமைச்சர் சொந்த மாநில மக்களை சந்திக்காதது ஏன்? மத்திய அரசை சார்ந்தவர்களும் ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை?

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மனித உரிமை ஆணையமும், குழந்தைகள் நல ஆணையமும் விசாரணை நடத்த வேண்டும். கள்ளச்சாராய விற்பனையிலும் அந்தந்த சமூகங்களைச் சேர்ந்த வியாபாரிகளிடம் அந்தந்த சமூக மக்கள் வாங்கி குடித்துள்ளனர். இதிலும் சாதிய கட்டுப்பாட்டோடு விற்பனை நடைபெற்றுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் காட்டில் விற்பனை நடந்தது. தி.மு.க ஆட்சியில் வீட்டிற்கே தேடிவந்து கள்ளச்சாரயம் விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்” என்றார்.

Madurai-based NGO Evidence seeks fair probe into Kallakurichi hooch tragedy

28 June 2024 7:00 AM ( Updated: 28 June 2024 7:00 AM ) | DT NEXT

MADURAI: Expressing disbelief in the CB-CID probe into the Kallakurichi
hooch tragedy, which claimed over sixty lives, A Kathir, the executive director
of Evidence, a Madurai-based NGO, sought a fair and thorough probe into the
tragedy and punish the guilty.
The primary responsibility of the government is to prevent illicit arrack but it
has failed in its duty, he told reporters in Madurai on Thursday.
A team from this voluntary organisation conducted a post-incident survey at
some localities in Kallakurichi from June 16 to 25. The survey revealed that five
victims were women among those 54 persons dead.
The survey revealed that the victims were aged from a minimum of 28 to a
maximum of 75. Further, he said 25 others including three women and a
transgender are in serious condition. As many as 132 persons including four
women, who consumed the spurious liquor, are under treatment.

Among the victims of the hooch tragedy, many of them belonged to
Karunapuram and others were from the villages of Mathavacheri and
Seshasamudram. Of the victims, 24 persons belonged to the SC community,
nine from ST (Kattu Naicker) 12 from the Vanniyar community, and others.
Besides, 28 children including 11 females had lost either one or both parents,
found the survey.
It found that the victims had stomach aches and the health of the consumers
was said to have worsened and eyesight became poor. All victims were menial
labourers such as construction workers, painters, and hard physical labourers.
Over 200 persons in Kallakurichi were engaged in illegally selling arrack
transported from Kalvarayan hills using lorry tubes.
He also appealed to the government to provide victim compensation of Rs 25
lakh to each of the families of those dead and also a government job.

Rights outfit seeks special panel to probe hooch tragedy

Jun 28, 2024, 06:47 IST | THE TIMES OF INDIA

Madras HC or SC should take suo moto cognizance on Kallakurichi hooch tragedy: Evidence NGO

28 JUNE 2024 | THE NEW INDIAN EXPRESS

MADURAI: Urging Tamil Nadu Chief Minister MK Stalin to provide a compensation of Rs 25 lakh to the kin of each victim of the Kallakurichi hooch tragedy, Evidence NGO’s Executive Director A Kathir also appealed to the Madras High Court or the Supreme Court to take suo moto cognizance of the matter.

Addressing media persons, Kathir said that over 60 people have died so far in Kallakurichi and many others are critical. He recalled the hooch mishap in Marakkanam, which claimed 22 lives last year, and said that despite the first incident, Chief Minister MK Stalin failed to prevent the second mishap. Evidence team members went to Kallakuirichi, and met 54 family members of the victims. As many as 28 children, including 11 girl, have lost their parents, said Kathir.

On June 18, a day before the hooch tragedy blew up, Kathir stated that one Jayamurugan and one Illayaraja had lost their lives. Another individual, Praveen, who suffered from pain after consuming arrack, was taken to the government hospital in Kallakuirichi, but doctors refused to treat him. “We found that even children were consuming liquor which was being sold for Rs 60/packet. The victims were daily wage labourers. The state government has earned a profit of Rs 45,865 crore from Tasmac sales, which comes from people belonging to the deprived  communities. Government mechanisms have failed to prevent the mishap,” Kathir added.

“Tamil Nadu Chief Minister should take responsibility for the hooch tragedy in Kallakuirichi. For a transparent inquiry, either the Madras High Court or the Supreme Court can take suo moto cognizance from a high-level committee consisting of a Supreme Court Judge or Madras High Court Judge with DGP. A special committee must be formed to provide psychological counselling to the children and women.

The government should provide a monthly assistance of Rs 5,000 to Rs 10,000 for the children who have lost their parents. An additional Rs 12 lakh and a government job must be given to the SC/ST victim’s families. Training must be imparted to representatives of village panchayat, town panchayat, and on how to prevent illicit liquor sales in their areas.

All three accused have been booked under IPC sections 328, 302, TN Prohibition act 4(1) (1), 4(1-A). They have also been booked under the Scheduled Caste and Scheduled Tribe (Prevention of Atrocities) Act, 1989, section 3(2)(V),” he added.

Court-monitored committee should be formed to probe into Kallakurichi hooch tragedy, says NGO

28 JUNE 2024 | THE HINDU

The Supreme Court or the High Court-monitored committee should be formed to investigate into the hooch deaths in Kallakurichi district, said Evidence executive director A Kathir here on Thursday.

Addressing a press conference, he said that the Tamil Nadu government had miserably failed in preventing the deaths which had exposed the incompetence of the administrators. The police department, which comes under Chief Minister M K Stalin’s portfolio, in Kallakurichi district had to be revamped thoroughly.

A mere transfer or suspension of a few officials would not serve the purpose. The CB-CID probe ordered by the government also would not be fair and impartial, but a mere eye-wash. The State government would not recommend CBI investigation for various reasons. Hence, a committee formed by the Supreme Court or the High Court alone would bring the dark areas to light and prevent such a tragedy in future.

Last year, Mr Stalin had assured that not a drop of illicit arrack would flow in the State after the Marakkanam deaths in Villupuram district. However, it was shocking as the number had almost tripled from 23 to 64 as on date. The deaths in Kallakurichi was likely to go up still, he feared.

Team visit
Knowing well through the police and other intelligence sources that illicit arrack was consumed by a large number of people, the government could have acted beforehand instead of responding now.

The compensation was just not enough to the legal heirs. In at least 25 families, the bread winner had died and the children required immediate counselling, he said and added that a team from the Evidence camped in Kallakurichi for seven days to gather inputs. They visited 54 families door-to-door and collected information from the dependents, Mr Kathir said. The situation was pathetic. Though the government had announced ₹5,000 as financial assistance per month, it should be increased to ₹10,000. The Scheduled Caste people formed the largest single group among victims in the hooch tragedy.

Complaints lodged
The villagers had lodged complaints in the past with the police about the illicit arrack, but the complainants received threat calls from unknown people. As the nexus between the police and the illicit arrack sellers was strong, the public is no match for them.

The network has to be busted and it required a strong will from the government. Many elected representatives also were connected with the agents and sellers of illicit arrack. There were at least 200 traders selling illicit arrack in the district and the maximum number of deaths were reported from Karunapuram, Madhavacheri, Seshasamudram and other habitations.

The State government should find alternatives to the revenue earned from Tasmac, which stood at ₹45,860 crore.

Recommendations
Though the police have registered murder cases against three accused, they should also invoke cases under SC/ST Prevention of Atrocities Act as the dead belonged to Scheduled Castes. By altering the FIR, the SC families would be eligible for another ₹12 lakh in assistance.

The State government should give government jobs to the families and also rehabilitate the elders who had lost their kith and kin. There were at least 28 children who had turned orphans and among them 17 were girl children. The government should give counselling to them and the womenfolk by trained experts.

The government should conduct a study and examine modalities to improve the economic aspects as the SCs were not only under paid many were jobless too.

The government should present a white paper on the hooch incident and the Chief Minister should visit the district without further delay. This would give the much-needed confidence to the public, he said.

 

“கள்ளக்குறிச்சியில் ‘வீடு தேடி கள்ளச் சாராயம்’ திட்டம்” – எவிடன்ஸ் கதிர் அடுக்கும் குற்றச்சாட்டுகள்

27 JUNE 2024 | Hindu Tamil

மதுரை: “கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்களுக்கு ஆளும்கட்சியின் 2 எம்எல்ஏக்கள், ஓர் அமைச்சருக்கு தொடர்பு உள்ளது. காவல் துறை ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச் சாராயம் விற்பனை நடக்க வாய்ப்பில்லை என்பதால், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்,” என்று எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் வலியுறுத்தியுள்ளார்.

உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு: இது தொடர்பாக, மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் கூறுகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் பலர் இன்னும் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். எனவே, உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும். கடந்த ஆண்டு விழுப்புரம், மரக்காணத்தில் கள்ளச் சாராயத்தினால் 22 பேர் இறந்தனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், இனி தமிழகத்தில் ஒரு சொட்டு கள்ளச் சாராயம் இருக்காது என்று சூளுரைத்தார். ஆனால், மரக்காணம் கள்ளச் சாராய மரணங்களை விட தற்போது மூன்று மடங்கு உயரிழப்பு கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது.ஆனால், முதல்வர் ஸ்டாலின் இதுவரை கள்ளக்குறிச்சி செல்லவில்லை. மாறாக தனது மகன் அமைச்சர் உதயநிதியை அனுப்பி நிவாரணம் வழங்கியுள்ளார்.

2 எம்எல்ஏ, ஓர் அமைச்சருக்கு தொடர்பு: முதல்வர் வர முடியாவிட்டால் சமூக நலத்துறை அல்லது அதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை வைத்து இந்த நிவாரண உதவியை வழங்கியிருக்க வேண்டும். விளையாட்டுத் துறை அமைச்சருக்கும், கள்ளச் சாராய இறப்பு சம்பவத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது?இப்படித்தான், இந்த ஆட்சியில் அனைத்து நிர்வாகங்களும் ஒட்டுமொத்தமாக செயலிழந்துள்ளது. இந்த கள்ளச் சாராய மரணத்தை அரசு, ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி மூடி மறைக்கப் பார்க்கிறது. ஆனால், கடந்த 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நேரில் ஆய்வு செய்த நாங்கள் அதனை எளிதாக கடந்து செல்ல முடியாது. இந்த கள்ளச் சாராய சம்பவத்தில் ஆளும்கட்சியின் 2 எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு அமைச்சருக்கு தொடர்பு உள்ளது.

‘வீடு தேடி கள்ளச் சாராயம்’ திட்டம்: இதுதவிர, உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும், கள்ளச் சாராய வியாபாரிகளுக்கும், போலீஸாருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழகத்தில் ‘வீடு தேடி கல்வி திட்டம்’ என்ற நிலை மாறி ‘வீடு தேடி கள்ளச் சாராயம் திட்டம்’ வந்ததுபோல், கள்ளக்குறிச்சி கிராமங்களில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை ரூ.60 கள்ளச் சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைத்து விற்கின்றனர். இந்தக் கள்ளச் சாராய வியாபாரம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் தாராளமாக நடந்திருக்கிறது. நிரந்தரமாக 200-க்கும் மேற்பட்டடோர் இப்பகுதியில் கள்ளச் சாராயம் விற்றுள்ளனர். கல்வராயன் மலையில் இருந்து லாரி டியூப் மூலமாக சாராயம் கொண்டு வரப்பட்டு அந்த சாராயத்தில் தண்ணீர் கலந்து 160 முதல் 180 பாக்கெட் போடப்பட்டு விற்கப்படுகிறது.

உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை… – ஒரு டியூப் சாராயம் ரூ.7 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் விலையில் கிடைக்கிறது. கள்ளச் சாராயத்தை அப்பகுதியில் 15 முதல் 16 வயதுடைய குழந்தைகள்கூட குடிக்கின்றனர். பொதுமக்கள், கள்ளச் சாராயம் விற்பதாக போலீஸாிடம் புகார் செய்தால் சம்பந்தப்பட்ட சாராய வியாபாரிகள், பொதுமக்கள் அளித்த புகாரோடு வந்து அவர்களை மிரட்டுகின்றனர். அப்படியென்றால் ஆட்சி நிர்வாகம் எந்தளவுக்கு தமிழகத்தில் சீர்கேட்டுப்போய் உள்ளது?

மேலும், கள்ளக்குறிச்சி காவல் நிலையம், மாவட்ட நீதிமன்றம் போன்ற அரசு நிறுவனங்களுக்கு அருகாமையில்தான் இந்த கள்ளச் சாராயம் விற்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு எவ்வளவு மெத்தனமாக இருந்திருக்கிறது என்பதற்கு இந்த மரணங்கள் சாட்சிகளாக இருக்கின்றன. சிபிசிஐடி விசாரணை என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு நடவடிக்கை. கள்ளச்சாராய மரணங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சாராய மரணங்களை தடுப்பதற்கு அரசு செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும்.

பூரண மதுவிலக்கு: டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டு தமிழகத்தில் ரூ.45,865 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. இந்த வருவாய், அப்பாவி கட்டிடத் தொழிலாளிகள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்களின் பணம் என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் தவிர கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் வியாபாரமும் தாராளமாக நடக்கிறது.மதுரையில் கஞ்சா கிடைக்காத கிராமங்களே இல்லாத நிலை உள்ளது. இதை தடுப்பதற்கு அரசு இயந்திரங்கள் முற்றிலும் தவறிவிட்டன. கள்ளச் சாராயத்தை திரைமறைவில் விற்றால் அரசு என்ன செய்ய முடியும்? என கடந்து போய்விடக்கூடாது. உளவுத்துறை போலீஸார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அரசை ஏமாற்றுகிறார்களா? அல்லது அரசு தெரிந்து கொண்டே நடவடிக்கை எடுக்காமல உள்ளதா? என்பது போன்ற சந்தேகங்கள் வருகிறது.

மூடி மறைக்க முயற்சி: இறந்தவர்களில் 54 குடும்பத்தை சேர்ந்தவர்களை எவிடென்ஸ் அமைப்பு நேரடியாக சந்தித்து கள ஆய்வு செய்தது. கள்ளச்சாரயம் குடித்து 19-ம் தேதி காலை 6.30 மணியளவில் சுரேஷ் என்பவர் இறந்து போனார். அவரைத் தொடர்ந்து பிரவீன் என்பவர் 9 மணிக்கு இறந்துள்ளார். ஆனால், இவர்களுக்கு முன்பே, 18-ம் தேதி ஜெயமுருகன், இளையராஜா ஆகியோர் இறந்துள்ளனர். இவர்கள் விவரம் மூடி மறைக்கப்பட்டுள்ளது. முதலில் கள்ளச் சாரயம் குடித்து மரணம் அடைந்த 2 தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மறுத்துள்ளது. அதன்பிறகு அந்த 2 பேர் மரணங்களை ஆட்சியரே உள்ளூர் அரசியல் புள்ளிகள் தூண்டுதலால் மறுத்துள்ளார். இறந்தவர்களில் 5 பேர் பெண்கள். 49 பேர் ஆண்கள். இவர்கள் குறைந்தபட்சம் 28 வயது முதல் 75 வயதுடையவர்கள்.

கூடுதல் நிவாரணம்: ஆபத்தான நிலையில் இருக்கும் 25 பேரில் 3 பெண்கள், ஒருவர் திருநங்கை. இதர 21 பேர் ஆண்கள். இவர்களின் குறைந்தப்பட்ச வயது 27; அதிகப்பட்ச வயது 72. சிகிச்சை பெறக்கூடிய 132 பேரில் 4 பேர் பெண்கள். 128 பேர் ஆண்கள். இவர்களின் குறைந்தப்பட்ச வயது 21; அதிகப்பட்ச வயது 75. கள்ளச் சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். இறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கள்ளச் சாராய வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இறந்துபோன பட்டியலின மக்களுக்கு கூடுதலாக ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.