News on Press

மலம் கலந்த மர்மம் வேங்கைவயல் தீண்டாமை..நடந்ததும் நடப்பதும்

06-05-2023 | Sathiyam News

Dalit panchayat chiefs say they face administrative oppression

Apr 30, 2023, 08:31 IST | TIMES OF INDIA

Dalit women panchayat presidents seek more support from government, NGOs

April 29, 2023 08:26 pm | THE HINDU

பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குறி வைக்கிறார்கள்: வேங்கைவயல் வேதனை பற்றி எவிடன்ஸ் கதிர்

April 28, 2023 18:56 IST | INDIAN EXPRESS TAMIL

வேங்கைவயல் விஷயத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள், 8 பேரின் டி.என்.ஏ பரிசோதனை எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்து நாங்கள் வழக்கு தொடர்ந்த பிறகு, தற்போது சி.பி.சி.ஐ. டி காவல்துறை 119 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்போது மட்டும் எப்படி 119 என்ற கணக்கு வந்தது என்றுதான் தெரியவில்லை என்று எவிடன்ஸ் கதிர் கேள்வி எழுப்பி உள்ளார்.

2022, டிம்சபர் 24 மற்றும் 25 தேதிகளில் வேங்கைவயலில் வசிக்கும் குழந்தைகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இந்த உடல் நலக்குறைவிற்கு, குடித்த தண்ணீர்தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறியதன் பெயரில், அப்பகுதி இளைஞர்கள் முத்துகிருஷ்ணன், சுதர்சன், முரளிராஜா, தண்ணீர் தொட்டிக்கு மேலே சென்று பார்த்தபோது மலம் கலந்தது தெரியவந்தது. இந்நிலையில் இச்சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக எவிடன்ஸ் கதிரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பாக உரையாடினோம்.

சி.பி.சி.ஐ.டி விசாரணை எப்படி செல்கிறது?

சி.பி.சி.ஐ.டி விசாரணையில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. 11 பேரிடம், டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று சம்மன் அனுப்புகிறார்கள். இதில் 8 பேர் பாதிக்கப்பட்ட தலித் மக்கள். பாதிக்கப்பட்ட 8 பேருக்கு ஆதரவாக, மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்த புகாரில் “ பாதிக்கப்பட்ட மக்களிடமே, டி.என். ஏ பரிசோதனை செய்வது தவறு. டி.என்.ஏ பரிசோதனை தொடர்பான சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். டி.என்.ஏ பரிசோதனை செய்வதன் பின்புலன் தொடர்பாக தெளிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம்.

இந்நிலையில் இந்த வழக்கை தொடர்ந்த பிறகு, 119 பேரிடம் ரத்த மாதிரிகளை சேகரிக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி காவல்துறை கூறியுள்ளது. இப்போது மட்டும் எப்படி 119 பேர் என்ற கணக்கு வந்தது என்று தெரியவில்லை?

டி.என்.ஏ பரிசோதனை ஏன் செய்யப்படுகிறது? இது தொடர்பாக சி.பி. சி.ஐ.டி வெயிட்ட தகவல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்

நீரில் உள்ள மலம் யாருடையது என்பது முக்கியமா? அல்லது மலத்தை யார் கலந்தது என்பதை கண்டறிவது முக்கியமா? என்ற அடிப்படை கேள்வி எழுகிறது. டிசம்பர் 26ம் தேதி மலம் கலந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நாளில் தண்ணீர் தொட்டியை பார்வையிட்ட காவல்துறையினர் மலத்தை எடுத்து பதப்படுத்தவில்லை. தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர்கள், மலம் மற்றும் மலம் கலந்த தண்ணீரை காவேரிநகர் செல்லும் வழியில், சாலையோரமாக உள்ள குப்பைமேட்டில் கொட்டியுள்ளனர். டிசம்பர் 30ம் (கடந்த ஆண்டு) தேதி இரவு 8. 45 மணிக்கு தலித் குடியிருப்புக்கு சென்ற காவல்துறையினர் மலம் எங்கே கொட்டப்பட்டது என்று கேட்டு விசாரித்துள்ளனர். பின்பு குப்பை மேட்டில் கொட்டப்பட்ட மலத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த மலத்தை பரிசோதனை செய்தில் எந்த பலனும் இல்லை.

டி.என்.ஏ பரிசோதனை தொடர்பாக நிபுணர்களிடம் பேசினேன். மற்றும் பல்வேறு வெளிநாட்டு ஆய்வுகளை படித்தேன். மலம் தண்ணீரில் கலந்தாலே, அது யாருடையது என்று கண்டுபிடிப்பது கடினமான ஒன்று. அப்படியே கண்டுபிடித்தாலும், அது துல்லியமாக இருக்குமா ? என்பது கேள்விகுறியே. இந்நிலையில் சம்பவம் நடந்த நாளில்தான் காவல்துறை, இந்த மலத்தை எடுத்து பதப்படுத்தியிருக்க வேண்டும். அப்படி பதப்படுத்தியிருந்தால், அது தொடர்பான விவரத்தை அவர்கள் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் டி.என்.ஏ பரிசோதனையில் பெண், ஆண் மலம் என்ற செய்தியை சி.பி.சி.ஐ.டி காவல்துறை பத்திரிக்கையில் வெளியிடுகிறது. இதன் நோக்கம் என்ன? டி.என்.ஏ பரிசோதனை செய்வதே சாத்தியம் இல்லாத போது, இந்த விவரங்கள் எப்படி கிடைத்தது. இதை அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் மே 6ம் தேதி முதல் விசாரணையை தொடங்குகிறது? இது குறித்து உங்கள் கருத்து?

தலித் மக்கள்தான் குற்றவாளிகள் என்று மீண்டும் வழக்கின் விசாரணையை திருப்புகிறார்கள் என்பது தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பிய பின்பே இந்த உத்தரவு வெளியாகிறது. இந்த ஆணையம் விசாரிக்க எவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பது தெரியவில்லை. பொருத்திருந்து பார்க்கலாம்.

வேங்கைவயல் விவகாரத்தில் ஏதேனும் அழுத்தங்கள் சந்திக்கிறீர்களா?

ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் சிலர், வழக்கின் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க நான் தடையாக இருப்பதாக நினைக்கிறார்கள். மீண்டும் பாதிக்கப்பட்ட தலித் மக்களை அவர்கள் குறிவைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை பாதியில்விட்டுச் செல்ல நான் ஒன்றும் கட்சிக்காரனோ அல்லது அரசு அதிகாரியோ கிடையாது. இறுதிவரை துணையாக இருப்பேன்.

‘Casteist Slurs Hurled’: Dalit Women Panchayat Heads in TN Share Horror Stories

28 Apr 2023, 8:38 AM IST | THE QUINT

ஆணவக்கொலைகான தனிச்சட்டம்!! | “எவிடன்ஸ்” கதிர்

27 Apr 2023 | India Younited

“மனிதக்கழிவு மூலம் DNA-வை கண்டறிவது சாத்தியமற்றது” – எவிடன்ஸ் அமைப்பு இயக்குனர் விளக்கம்

27 Apr 2023 | PuthiyathalaimuraiTV

Vengavayal row: Eight Dalits skip DNA test ordered by special court, move Madras HC

APRIL 26, 2023 - 13:59 | THE NEWS MINUTE

Eight Dalits refused to give their blood samples for the DNA test on Tuesday, April 25, in connection with the probe into the mixing of human faeces in an overhead water tank providing drinking water to a Dalit colony in Vengavayal village of Pudukkottai district. A special court in Pudukkottai had issued directions on April 18 to collect the blood samples of 11 persons from Vengavayal and neighbouring villages.

The test is being carried out to ascertain whether it matches DNA material found from contaminated water in the tank. However, only three people presented themselves in the Government Medical College Hospital for the test. The remaining eight persons skipped the DNA test alleging that it was being used to frame victims in the case related to the inhuman act of caste discrimination.

Among those summoned, nine are from Dalit communities while two belong to the Mutharaiyar community, which is classified as Backward Class in Tamil Nadu. On April 25, a policeman from the Dalit community and two caste-Hindus including Muthiah, husband of Padma, the president of Muthukadu panchayat, gave blood samples on Tuesday.

Two Dalit men, Muthukrishnan and Sudarsan, residents of Vengavayal, who were summoned to give blood samples, approached the Madurai Bench of Madras High Court and sought to quash the order by the special court judge. In the petition, they mentioned that the CBCID (Crime Branch-Criminal Investigation Department) investigation made no progress in finding accused persons who contaminated the water with human excreta. They also stated that people from Dalit communities did not have confidence in the investigation.

The petition said the actions and inactions of the Deputy Superintendent of Police of CBCID created strong doubts in the minds of the Scheduled Caste community. Instead of tracing the real accused persons, the agency is diverting the investigation by treating the victims of the incident as suspects and harassing them in the guise of inquiry, it said.

The petitioners also alleged that the Special Court approved the DNA test on the petitioners without sufficient materials. In the petition, the Dalit men from the Vengavayal alleged that the investigation team violated Section 15-A of the Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act 1989. Section 15-A of the SC/ST POA Act provides the rights of victims and witnesses. They also sought the stay of all further proceedings related to the order given by the special court judge.

The special court in Pudukottai ordered DNA tests on 11 persons, on April 18. The order was based on the request filed by the CB-CID Deputy Superintendent of Police, Trichy Range.

The incident came to light on December 24, 2022, after the government doctors advised the residents of the colony to check water contamination as many children who hail from the Dalit colony fell sick. The case was initially probed by the Pudukkottai district police and later, transferred to the CBCIS on January 14.

Talking to TNM, Kathir, founder of the NGO Evidence, condemned the CB-CID investigation and said “no steps have been taken to find who dumped the faeces in the tank but the investigation unit is trying to establish whose faecal matter was used to contaminate the drinking water”. He called the entire investigation absurd.

`114 ஊராட்சித் தலைவர்களிடம் ஆய்வு 30 வகை தீண்டாமைக் கொடுமைகள்’ -எவிடென்ஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கை

22 Apr 2023 1 PM | VIKATAN

தமிழகத்தில் பட்டியல் சாதி ஊராட்சித் தலைவர்கள்மீது சாதிய பாகுபாடும் பலவகையான ஒடுக்குதலும் தொடர்ந்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் அமைப்பு தமிழகத்திலுள்ள பட்டியலின ஊராட்சிகளை 200 கள ஆய்வர்களைக்கொண்டு ஆய்வு நடத்திய நிலையில், அதன் ஆய்வறிக்கையை எவிடென்ஸ் நிர்வாக இயக்குநர் கதிர் வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியவர் கதிர், “தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 114 பட்டியல் சாதி ஊராட்சித் தலைவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இவற்றில் 79 (66 சதவிகிதம்) பெண் ஊராட்சித் தலைவர்கள், 35 (38 சதவிகிதம்) ஆண் ஊராட்சித் தலைவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாவட்டங்களில் சிவகங்கை 13, ராமநாதபுரம் 6, விருதுநகர் 10, திருநெல்வேலி 2, தென்காசி 1, அரியலூர் 8, பெரம்பலூர் 1, தஞ்சாவூர் 2, தேனி 16, கோயம்புத்தூர் 8, திருப்பூர் 4, சேலம் 1, கிருஷ்ணகிரி 1 மதுரை 14, காஞ்சிபுரம் 2, திருவள்ளூர் 2, செங்கல்பட்டு 3, விழுப்புரம் 2, கடலூர் 8, கள்ளக்குறிச்சி 10 என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்மையாகப் பணி செய்ததற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகிலுள்ள தாரவேந்திரம் ஊராட்சித் தலைவர் நரசிம்மமூர்த்தி கற்களாலும் கட்டையாலும் அடித்துக் கொலைசெய்யப்பட்ட அவலமும் நடந்திருக்கிறது. தமிழகத்தில் நான்கு பட்டியலின ஊராட்சித் தலைவர்களுக்குப் பாலியல்ரீதியான துன்புறுத்தல் நடைபெற்றிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில், 30 வகையான தீண்டாமைக் கொடுமைகள் நடைபெற்றிருக்கின்றன. தமிழகத்தில் கடந்த ஓராண்டில் தேசியக்கொடியை ஏற்றவிடாமல் 12 பட்டியலின ஊராட்சித் தலைவர்களைத் தடுத்திருக்கின்றனர். 11 ஊராட்சித் தலைவர்களை இருக்கையில் அமரவிடாமல் தடுத்தது போன்ற அவலங்களும் நடந்திருக்கின்றன.

பட்டியலின ஊராட்சித் தலைவருக்கான தேர்தலில் பட்டதாரிகளைப் போட்டியிட வைக்காமல், கல்வியில் ஐந்து வரை படித்தவர்களைப் போட்டியிட வைத்திருக்கும் அவலமும் நடைபெற்றிருக்கிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில், கோயில் திருவிழாக்களில் 45 பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்காத நிலை இருக்கிறது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பழையூர் ஊராட்சியின் பட்டியலின ஊராட்சித் தலைவரான பெண்ணை சாதிரீதியாகப் பேசி இழிவுபடுத்தியிருக்கின்றனர். 2021-ம் ஆண்டு பழையூர் நீர்தேக்கத்தொட்டியில் மலத்தைக் கலந்திருக்கின்றனர். இது குறித்து சாப்டூர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. பழையூரில் 2022-ம் ஆண்டில் ஊராட்சி மன்ற அலுவலக வாசலில் மலம் கழித்து வைத்திருக்கின்றனர். பட்டியலினத் தலைவர் கட்டிய குளியல் தொட்டியில் 15 தடவைக்கு மேல் மலத்தைக் கழித்து கலக்கிவிட்டிருக்கின்றனர். ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்… “பட்டியலின ஊராட்சி ஆண் – பெண் தலைவர்களுக்கு தமிழக அரசு தலா 10,000 ரூபாய் நிதி வழங்க வேண்டும்.

தமிழக அளவில் இது போன்ற சாதியப் பாகுபாடுகள் குறித்து கண்டறிய நடவடிக்கைகள் எடுக்க கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும். நாடாளுமன்றம்மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்றதுதான் பட்டியலின ஊராட்சித் தலைவர்களைத் தேசியக்கொடியை ஏற்றவிடாமல் தடுப்பதும் ஆகும்.

தேசியக்கொடியை ஏற்றவிடாமல் தடுப்பது குறித்து பேச்சுவார்த்தை மட்டுமே நடத்துவது நியாயமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் தொடர்ந்தவர், “சமூகநீதி குறித்துப் பேசும் தி.மு.க அரசு, பட்டியலின சமூக மக்களை மேம்படுத்துவதும் சமூகநீதிதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் சிறிய குடிசைகளில் வசித்துவருகின்றனர். தமிழகத்தில் 94 பட்டியலினத் தலைவர்கள் பதவி வகிக்கும் ஊராட்சிகளில் சமத்துவ மயானங்கள் இல்லை.

பட்டியிலின ஊராட்சித் தலைவர்கள்மீதான தாக்குதல், இழிவுசெய்த புகாரில் பதிவுசெய்த வழக்குகளில் கட்டப்பஞ்சாயத்து, சமரசம் எனக் கூறி பிரச்னைகளைத் திசைதிருப்புகின்றனர். இது போன்ற வழக்குகளில் ஒரு சதவிகிதம்கூட தீர்ப்புகள் கிடைப்பதில்லை.

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் எஸ்.சி/எஸ்.டி ஆணைய கூட்டங்கள் முறையாக நடப்பது இல்லை. அதில் மாவட்ட ஆட்சியர்களே கலந்துகொள்வதில்லை. அப்படியே நடக்கும் இந்தக் கூட்டங்களில் பல்வேறு வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

மேலும், தமிழகம் முழுவதுமுள்ள பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் பதவி வகிக்கும் ஊராட்சிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும். தலித் பாகுபாடு குறித்து தமிழக அரசு ஆய்வுசெய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

வேங்கைவயல் சம்பவத்தில் வழக்கை இழுத்தடிக்க, மலத்தை வைத்து அறிவியலுக்குப் புறம்பான புதுவிதமான சோதனையெல்லாம் செய்துவருகிறது காவல்துறை” என்றார் எவிடென்ஸ் கதிர்.

சாதிய பாகுபாடுகள் குறித்த ஆய்வறிக்கை – வெளிவந்த பல முக்கிய தகவல்கள்

22 Apr 2023 | PuthiyathalaimuraiTV