News on Press

சென்னையில் கூட்டுப் பாலியலுக்கு ஆளான எட்டாம் வகுப்பு மாணவி – என்ன நடந்தது?

2 மார்ச் 2022 | ஆ.விஜய் ஆனந்த் பிபிசி தமிழுக்காக

சென்னையில் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு நேர்ந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் மருத்துவ மாணவர் உள்பட உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று மாணவிகளை காவல்துறை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

சென்னையை அடுத்துள்ள ராமாவரத்தில் தனியார் பள்ளியில் படித்து வரும் 13 வயது சிறுமி ஒருவர், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மாணவி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இது தொடர்பாக, பள்ளியின் ஆசிரியை ஒருவர், மாணவியின் பாட்டியிடம் விசாரித்துள்ளார். மாணவியும் உடல்நலம் குன்றிய நிலையில் இருப்பதைக் கவனித்து விசாரித்தபோதுதான் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அந்த மாணவிக்கு பல் மருத்துவம் படிக்கும் நாகர்கோயிலை சேர்ந்த வசந்த்கிரிஷ் என்ற மாணவர், போதைப் பொருளை அதிகளவில் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், அவரது நண்பர்களான சினிமா துணை நடிகரான பாலசிவாஜி என்ற ரஞ்சித், கல்லூரி மாணவர் விஷால், தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் பிரசன்னா என நான்கு பேர், மாணவியை போதை மருந்தைக் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் மாணவி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கைதான மருத்துவ மாணவர், விரிவுரையாளர்

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பாட்டியும் ஆசிரியையும் வடபழனி உதவி காவல் ஆணையர் பாலமுருகனின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து இந்த வழக்கை வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர். மகளிர் போலீஸாரின் விசாரணையில், ராமாவரத்தில் வசந்தி கிரிஷ் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்தே மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் கைதான நான்கு பேர் மீதும் போக்சோ உள்பட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த விவகாரத்தில் மூன்று மாணவிகளுக்குத் தொடர்பிருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. மாணவர் வசந்த் கிரிஷின் காதலி மூலமாக பள்ளி மாணவிக்கு வலைவிரிக்கப்பட்டதாகவும் பள்ளி மாணவி தினமும் பானிபூரி சாப்பிட கடைக்கு வரும்போது இயல்பாக அவரிடம் நட்பு ஏற்படுத்திக் கொண்டதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிக்கலில் மூன்று மாணவிகள்?

இதன்பிறகு வசந்த் கிரிஷின் வீட்டில் மாணவிக்கு போதை மருந்துகளைக் கொடுத்து தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமையில் இந்த கும்பல் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ பதிவை மாணவி ஒருவர் வைத்துள்ளதாகவும் இந்தச் சம்பவத்தில் அவர் உள்பட மூன்று மாணவிகளுக்குத் தொடர்பிருப்பதால் அவர்களை காவல்துறை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிலும், பள்ளி மாணவிக்குப் பெரிதாக பின்புலம் இல்லாதது, பெற்றோர் பிரிந்திருப்பது ஆகியவற்றைக் கவனித்த பிறகே அவரைத் தவறாகப் பயன்படுத்தும் நோக்கில் கைதான கும்பல் செயல்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, வடபழனி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ரேணுகாதேவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ஆனால், விரிவாக பேச நேரமில்லை என்று கூறி விட்டார்.

Tamil Nadu govt urged to put an end to ganja peddling, machete culture

Feb 25, 2022, 18:35 IST | THE TIMES OF INDIA

MADURAI: The Tamil Nadu government and the police department have been urged to give special attention to put an end to ganja peddling and machete culture. This has been put forward by Evidence, a dalit rights NGO, based on its fact finding study conducted on the murder of a dalit youth by a gang at Odaipalam on the outskirts of Madurai city on Monday evening.
A Kathir, the executive director of the, who conducted the fact finding study, said Pasupathi Kannan, 27, of Sikkandar Chavadi, was murdered as he had questioned some youths who were smoking ganja and cutting a cake with a machete near a temple the day before the murder. Kannan, a construction worker, was a resident of Manthai Amman Temple Street in Sikkandar Chavadi.
Around 6.30 pm on Monday, he found a group of around 10 youths smoking ganja near the temple and cutting a cake with a machete instead of using a plastic knife and questioned them for their act. An argument broke out and a few others came to the support of Kannan. The locals pacified both the groups and cleared the place. On Tuesday evening, Kannan was chatting with his relatives and friends in a paddy field at Odaipalam.
A gang of around 10 people attacked him with machetes and knives, leaving multiple cut injuries on his body despite attempts by his friends to save him. Kannan was rushed to a private hospital and referred to Government Rajaji Hospital, but he died on the way. A case was registered under seven sections of the IPC and under the SC/ST Prevention of Atrocities Act.
The Koodalpudur police arrested five people, including a 17-year-old boy, and are on the lookout for the others who were on the run. “The teenager was lodged in a home for children in conflict with law. Four other accused are aged less than 25 years. Kannan was murdered for questioning the youths involved in antisocial activities. The government should put an end to ganja peddling,” Kathir said.
Pasupathi Kannan is survived by his wife Swetha who has completed B Com, a three-month-old daughter and aged parents. The NGO has urged the government to give a job to Swetha and a monthly pension of Rs 15,000 to Kannan’s parents. Pressing for the speedy arrest of the remaining accused, it said trial in the case should be expedited and completed in six months so that the victim gets justice without delay.

Gang murdered Dalit youth for questioning it: fact-finding team

FEBRUARY 25, 2022 19:18 IST | THE HINDU

Expressing concern over easy access to ganja, a fact-finding team from Evidence, an NGO in Madurai, appealed to police to deal with the issue with an iron hand.

A Dalit youth, Pasupathi Kannan, 27, of Manthai Aman Koil Street in Sikkandar Chavadi here, reportedly questioned some youth for misbehaving in public four days ago, and he was allegedly murdered within two days.

When Pasupathi Kannan objected to them smoking ganja in front of the temple and carrying the weapons, the gang started a wordy altercation with him. However, some of the elders in the area asked them to leave the place.

When Pasupathi Kannan was sitting with his friends near a stream in Sikkandar Chavadi after two days, the armed gang came to the spot and attacked him. He was rushed to Government Rajaji Hospital, where doctors declared him dead.

Koodal Pudur police registered cases under Sections 147, 148, 149, 294 (b), 302 and 506 (2) of the IPC and 3 (2) (va) of the SC/ST (Prevention of Atrocities) Act, 2015. They also arrested five accused, including a juvenile, and detained them in Melur sub-jail.

The fact-finding team members said ganja was easily accessible to the youth and a majority of them were addicted to it. There could not be any other reason for the murder as there was no previous enmity, they claimed and appealed to the police to put an end to the menace.

The officials had given ₹6 lakh (50% of the solatium for death of a Dalit) to the family of Pasupathi Kannan. The wife of Pasupathi Kannan, a graduate, said she was unable to understand why her husband was killed.

“Was it wrong to question the youth for smoking ganja?,” she asked the team members, holding her three-month-old girl child, Mr. Kathir said, and urged the State government to give her an employment and provide a pension of ₹15,000 to the victim’s parents. He also demanded the arrest of the other suspects.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தவர் மீது ‘அரை நிர்வாணத் தாக்குதல்’ : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீடியோவால் சர்ச்சை

20 பிப்ரவரி 2022 | பிபிசி தமிழ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது வாக்கு செலுத்த வந்த நபர் ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அ.தி.மு.கவினர், அரை நிர்வாணமாக்கிய காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ` ஒரு குற்றவாளியை கையாள்வதற்கு என சில வழிமுறைகள் உள்ளன. சாதாரண மக்கள் ஆயுதம் வைத்திருக்க மாட்டார்கள். ஆனால், இந்த நபர் அப்படிப்பட்டவர் அல்ல’ என்கிறார் ஜெயக்குமார். என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி 19 அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி வாக்குப் பதிவு நாளான சனிக்கிழமையன்று காலை முதலே தி.மு.க மற்றும் அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகள் பலரும் வார்டு வாரியாக நிலவரத்தைக் கண்காணித்து வந்தனர். குறிப்பாக, `கள்ள வாக்குகளை யாரும் பதிவிட்டுவிடக் கூடாது’ என்பதில் ஒவ்வொரு கட்சிக்காரர்களும் உன்னிப்பாக இருந்தனர். இந்நிலையில், ராயபுரத்தில் உள்ள 49 ஆவது வார்டில் பொதுமக்கள் வாக்கு செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில், சற்று உடல் பருமனாக இருந்த நபரை முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் சுற்றி வளைத்தனர்.

அந்த நபர் இதற்கு முன்னரே வாக்கு செலுத்திவிட்டதாகவும் தற்போது கள்ள ஓட்டு செலுத்த வந்துள்ளதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கவனித்த ஜெயக்குமார், அந்த நபரின் சட்டையைக் கழற்றிவிட்டு, கைகளைக் கட்டி காவல்நிலையம் அழைத்துச் செல்லுமாறு கூறினார். தொடர்ந்து அங்கிருந்த அ.தி.மு.கவினர் அந்த நபரை அடித்துள்ளனர். அந்த நபரும் தன்னிலை விளக்கம் கொடுக்கிறார். இவை அனைத்தும் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டன. இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலானதும், `ஒரு முன்னாள் அமைச்சரே சட்டத்தை மீறி இவ்வாறு நடக்கலாமா?’ என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர், “தமிழ்நாடு அரசில் சட்ட அமைச்சராக ஜெயக்குமார் இருந்துள்ளார். அந்த நபரிடம், `சட்டையைக் கழட்டு’ என அவர் கூறுவதை ஏற்க முடியாது. தொடர்ந்து அந்த நபர் அரை நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படுகிறார். அங்கிருந்தவர்களில் சிலர் வழக்கறிஞர்களாகவும் இருப்பதுதான் கொடுமை. இதை ஒரு கும்பல் வன்முறையாகப் பார்க்கிறோம். இது என்ன உத்தரபிரதேசமா? அரசியல் கும்பல் வன்முறையை அ.தி.மு.கவினர் தொடங்கிவைப்பதாகவே பார்க்கிறோம். இதற்கு முன்பு இப்படிப்பட்ட சம்பவங்கள் இங்கு நடந்தது கிடையாது” என்கிறார்.

மேலும், “ வாக்குச் சாவடிக்குள் அந்த நபர் கள்ள ஓட்டு போட வந்தார் என்றால் அவரைக் காவல்துறையில் ஒப்படைத்திருக்க வேண்டும். அ.தி.மு.கவினர் எடுத்த வீடியோவிலேயே, சட்டையைக் கழட்டு என ஜெயக்குமார் கூறும் காட்சிகள் பதிவாகியுள்ளது. ஒரு வன்முறையை தானே பதிவு செய்து வெளியிடுவது சரியானதா? அந்த நபர் தவறு செய்திருந்தால் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து காவல்துறை கைது செய்யட்டும். இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றமே இந்த வழக்கை தாமாக முன்வந்து பதிவு செய்ய வேண்டும். இதுபோன்று சட்டத்தைக் கையில் எடுப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்கிறார்.

வடசென்னையில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அரசு வழக்கறிஞரும் தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளருமான வீ.கண்ணதாசன், “ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரால் அரை நிர்வாணப்படுத்தப்பட்ட அந்த நபர் தி.மு.கவை சேர்ந்தவர்தான். அவர் பெயர் நரேஷ். ஆனால் அவர் மேல் எந்த குற்ற வழக்குகளும் இல்லை. வாக்கு போட்ட பிறகு தன்னுடைய நண்பர்களுக்காக அவர் அங்கே காத்திருந்தார். அந்த நேரத்தில் இவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர்” என்கிறார்.

எவிடென்ஸ் கதிர்

பட மூலாதாரம்,VINCENT RAJ/FB

படக்குறிப்பு,வாக்குச் சாவடிக்குள் அந்த நபர் கள்ள ஓட்டு போட வந்தார் என்றால் அவரைக் காவல்துறையில் ஒப்படைத்திருக்க வேண்டும் என்கிறார் எவிடென்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர்

“ முன்னாள் சபாநாயகராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் ஜெயக்குமார் இருந்துள்ளார். அரை நிர்வாண கோலத்தில் ஒருவரை அழைத்து வருவது போன்ற காட்சிகள் எல்லாம் வடநாட்டில்தான் நடக்கும். கைகளைக் கட்டச் சொல்வதற்கு எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? அவர் மீது வழக்குகள் உள்ளதா.. இல்லையா என்பதெல்லாம் வேறு விஷயம். இந்தச் சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம்” என்கிறார்.

“அந்த நபரை அரை நிர்வாணப்படுத்தியது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே?” என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். “ ராயபுரத்தில் உள்ள 49 ஆவது வட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. அந்த நபர் ஒவ்வொரு தேர்தலிலும் கள்ள வாக்கு செலுத்துவதை வழக்கமாக வைத்திருப்பவர். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கைகளைக் கட்டச் சொன்னதற்குக் காரணம், அவர் என்ன ஆயுதம் வைத்துள்ளார் என்று யாருக்கும் தெரியாது. அவர் கையில் உள்ள ஆயுதத்தால் தாக்கிவிட்டால் என்ன செய்வது? முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் அவ்வாறு செய்தோம்” என்கிறார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பட மூலாதாரம்,JAYAKUMAR/FB

தொடர்ந்து பேசுகையில், “எங்களிடம் பிடிபட்டவர் பொதுமக்களில் ஒருவர் அல்ல, குற்ற வழக்குகள் உள்ள ஒருவர். ஒரு குற்றவாளியை கையாள்வதற்கு எனச் சில வழிமுறைகள் உள்ளன. அப்படிப்பட்ட நபரைக் கைகளைக் கட்டிவிட்டுத்தான் காவல்துறையில் ஒப்படைக்க முடியும். அந்த நேரத்திலும், `அந்த நபரை யாரும் அடிக்கக் கூடாது. அவரை முறையாக காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும்’ என்றேன். அவர் மீது ஓர் அடிகூட விழாத அளவுக்குப் பார்த்துக் கொண்டோம். கள்ள ஓட்டு போட வந்ததாக அந்த நபர் மீது புகாரும் பதிவாகியுள்ளது” என்கிறார்.

மேலும், “ எங்களிடம் பிடிபட்ட நபர் முதலில் காமராஜர் பள்ளியில் வாக்கு செலுத்தினார். பின்னர், அப்பாசாமி பள்ளியிலும் வாக்கு செலுத்தினார். அதற்கான ஆதாரங்கள் உள்ளன” என்கிறார்.

வானதி மகளுக்கு இப்படி நடந்தால்..?

10 Feb 2022 | Liberty Tamil

ஜெய்பீமும் ஜெய்ஸ்ரீராமும் ஒன்றா ராமன் என்ன சட்ட மேதையா? எது இந்தியா?

9 Feb 2022 | ARAKALAGAM TV

Dalit Christian activist bags European award

January 31st, 2022 | Light of Truth

A social activist from Tamil Nadu, southern India, has received this year’s Raoul Wallenberg Prize, a prestigious award given by the European Council.
The ceremony took place in France and Arokiasamy Vincent Raj, popularly known as Evidence Kathir, received the award online on January 19. The award, given every two years, carries a cash prize of 10,000 Euros equivalent of 842,770 rupees, besides a citation.
“I am happy for Evidence Kathir. I wish him good luck for what he is doing for the Dalits and the Tribals,” said Tamil Nadu Chief Minister M. K Stalin in his congratulatory message.
Kathir runs a 25-year-old non-profit organization in Madurai that works mainly for Dalits and the Tribals in Tamil Nadu.
He and his team reach out when atrocities against Dalits and Tribals take place. He trains human rights defenders especially the youth in Tamil Nadu.
The award is seen as “a great honor” for all Dalit activists and the human defenders in Tamil Nadu.
Kathir says he has been committed to the human rights issue for the past 25 years. “It is a challenging job and I feel its great recognition for my work,” he adds.

Vincent Raj alias Evidence Kathir: Fight for all on the road to justice

26th January 2022 06:57 AM | THE NEW INDIAN EXPRESS

CHENNAI: Ella pugazhum makkalukke,” signed off Vincent Raj alias Evidence Kathir after accepting the Council of Europe’s prestigious Raoul Wellenberg Award last week. This is the sentiment that has driven Vincent and his organisation to persist in the fight for human rights, particularly Dalit rights, for over 25 years now. After thousands of cases, many a difficult success, and plenty of threats to personal safety, it is this very purpose that has brought home the award that was meant to honour extraordinary human achievement, courage, and success against all odds.

“Looking back, a quarter of a century has gone by in helping victims of human rights violations, sharing their pain, standing by them at the police station or hospital, protecting them, taking up their court case on their behalf, and parallelly doing skill training and such. It has been a rich experience — in a tragic way,” he recounts. Today, Evidence is recognised as the go-to organisation for Dalits and others in need. It has built a name of repute across the country, even inviting praise from the likes of Rahul Gandhi. But all this, as it always does, had a humble beginning back home.

From personal experiences

A Dalit born and raised in the contentious belly of Madurai, Vincent has been subjected to atrocities himself. But to think that an activist is made from the one big deed of injustice that has been done to him is a false notion and a rather dramatic one, he suggests.

“Our interests and concerns, the impact of several incidents over a period of time, the need to do something for the people around us — all this brings out the ‘activist’ in us. But there were many things in my life that affected me. In 1984, a cousin of mine was gang-raped and the panchayat charged the accused with just a fine of Rs 80; we were not allowed to file a case. In class 11, my teacher asked which community I belonged to and I felt so uncomfortable to give that answer. We belong to the Parayar community; enga thaatha saavuku ellam molam adipaaru. Growing up watching all this, and the way my parents raised me, I wanted to do something for society. Though I entered the field as an environmental activist, I immediately moved to human rights,” he narrates. This was all the way back in 1995. It would be ten more years before Evidence is registered as an organisation. And there’s been no dearth of work since.

A scheduled caste (SC) person faced crime every 10 minutes in India in 2020, cumulating to a total of 50,291 cases registered that year, an increase of 9.4 per cent from the previous year, data from the National Crime Records Bureau says. Vincent’s work has allowed a small percentage of this number to find justice. Over the years, he’s been directly involved in seeking justice for over 3,000 cases of human rights violations and helped rescue/rehabilitate over 25,000 people.

Educating the masses

Kollimalai of Thiruvanduthurai village near Mannarkudi of Thiruvarur district counts himself as one such beneficiary. The 45-year-old brick kiln worker was returning home from work, when he was subjected to torture and humiliation by three upper-caste men. He was made to eat human waste and the three men urinated on him. When the cops eventually arrested the men, they were only charged for the crime of using casteist slurs. It was with the involvement of Evidence and Vincent that the case had any movement.

“No one here knew that the case had to be filed under SC/ST (Prevention of Atrocities) Act. The police were of no help either. A team of ten showed up from Evidence, they created awareness and brought out the issue. Kathir sir gave me confidence when I was on the verge of suicide. He promised to win the case for me and encouraged me to not back down from the fight. It’s because of him that I continue to live with dignity here,” shares Kollimalai. Not only were the three men convicted, but Vincent also made sure that Kollimalai received the compensation due to him.

In the case of the late S Nagamuthu of T Kallupatti village in Periyakulam, Theni, the battle has raged on for 10 years now. And it’s still far more progress than the family had ever hoped to achieve. When the young Dalit priest of a local temple complained of discrimination and harassment by caste Hindus of the village, the police failed to even register a case. There was a lot of pressure to withdraw the case, and many threats too. It was when Nagamuthu reached out to Evidence that they could even begin the process of seeking justice. Nagamuthu died by suicide in December 2012; now, his family has been keeping up the fight on his behalf.

“En magan thadam theriyama poitan. He directed me to Kathir and because of him, we were able to go all the way to the High Court. If not for him, people in power would have destroyed our family by now. Instead, the entire state knows about the case of an SC boy now,” points out Subburaj, Nagamuthu’s father, breaking down as he recalls the horrors of the past decade.

Attacks amid activism

Evidence has played an integral role in the Shankar-Kousalya case as well. An effort to investigate the death of a Tamil tribal girl in Kerala led to the rescue of 1,000 girls who had gone there for domestic jobs (thanks to the effort of other organisations who stepped in as well). He rescued 58 families (non-Dalits) from the clutches of bonded labour. Through all this, Vincent himself has been subjected to threats and physical attacks. After the rescue of the bonded labourers, he was bound up and beaten up; with kerosene thrown on him, that was the night he believed he wouldn’t make it.

Many a times, he’s had to move his wife and son to safety, keep them out of harm’s way; stay out of town for months together. All in the effort to keep the work going; even as the work seems as much a constant as it ever was. What keeps him going still? The sense of having served an entire generation of a family while rescuing one man/woman, the change inspired by his help, the sense of self-sufficiency it inspires in the community. Kollimalai has done his part to help his fellow Dalits in trouble. Mukkaiah Thevar no longer bears the caste surname. And so on.

But, naturally, there’s plenty left to do. “An activist has three roles — improve the conditions of the oppressed community, bring about change within the dominant community acting as oppressors, and bring policy level changes in institutions.  We work towards these changes, and they are happening. When George Floyd was killed, White people came to the streets to apologise. In India or Tamil Nadu, is there any history of the dominant castes asking for forgiveness for the atrocities committed in the name of caste? When that day comes, we can say that democracy has begun to sprout,” he surmises.

Inspiration 

While Vincent labels himself an atheist, he finds great inspiration in the works of Jesus. As long as we don’t use the garb of religion, everything the man did was advocate for human rights, points out Vincent. He also views Mary as a feminist, who braved the conditions to have a child out of wedlock and raised him to do all he could for the people around him.

மனித உரிமைக்கான போராட்டம்: சர்வதேச விருது பெற்ற எவிடென்ஸ் கதிர் – சிறப்பு நேர்காணல்

Jan 21, 2022 | ETV Bharat.

மதுரை: தெற்காசியாவிலேயே முதன்முறையாக ‘ராவுல் வாலன்பெர்க்’ எனும் விருதைப் பெற்றுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ‘எவிடென்ஸ்’ கதிர் என்ற வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

அப்போது அவர் பேசியதாவது, “ஐரோப்பாவிலுள்ள 47 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தக் கவுன்சில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச அமைப்பாகும். மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகளுக்காகப் பணி செய்பவர்களைத் தேர்வு செய்து இந்த விருதை வழங்கி வருகிறார்கள்.தற்போது 5ஆவது முறையாக, தெற்காசியாவிலேயே முதலாவதாக இந்த விருது எனக்குக் கிடைத்துள்ளது என்பது ‘சாட்சியம்’ அமைப்பு மேற்கொண்ட பணிகளுக்குக் கிடைத்த பெருமையாகும்.

மனித உரிமை மீறல்கடந்த ஜனவரி 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற இணையவழி நிகழ்ச்சியில், ராவுல் வாலன்பெர்க் விருதுக்காக மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் அமைப்பின் நிர்வாகி ‘வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமி’ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தபோது, மொத்த அரங்கமும் ஒரு கணம் அதிர்ந்துதான் போனது.

ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதோர் என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான போராட்டத்தில் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டு, இதுவரை மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல் நிகழ்வுகளில் 25 ஆயிரம் பேரை காப்பாற்றியுள்ளார் என்பது அத்தனை எளிதானது அல்ல.எவிடென்ஸ் கதிர் சிறப்பு நேர்காணல்அர்ப்பணிப்பு உணர்வு தேவைசமூகப் பணியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். 3 ஆயிரம் மனித உரிமை மீறல் நிகழ்வுகளில் நேரடியாகப் பங்கெடுத்துள்ளேன். 25 ஆயிரம் பேர் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இதற்காக பல்வேறு முறை தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறேன்.கொல்வதற்கும் முயன்றிருக்கிறார்கள். மனித உரிமைப் பணி என்பது சவால் நிறைந்தததாகும். அதே சமயத்தில் சகிப்புத்தன்மையும், அர்ப்பணிப்பு உணர்வும் அதிகம் தேவைப்படுகின்ற பணியாகும். ஆகையால் இந்த விருது பாதுகாப்பையும், தெம்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அடுத்து வருகின்ற இளையதலைமுறையினருக்கும் மனித உரிமைப் பணிகளின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

ராவுல் வாலன்பெர்க்இரண்டாம் உலகப்போரின்போது ஹங்கேரி யூதர்கள் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றியவர் ஸ்வீடனைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ராவுல் வாலன்பெர்க். இதற்காக நடைபெற்ற போராட்டத்தின் அடிப்படையில் கடந்த 1945ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் நாள் அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த நாளை நினைவுகூர்ந்து, உலகின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகளுக்காகச் செயல்படும் நபர்களை ஊக்குவிக்க கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்வீடன் மற்றும் ஹங்கேரிய அரசுகளால் ராவுல் வாலன்பெர்க் விருது வழங்கப்பட்டு வருகிறது.சர்வதேச விருது

ராவுல் வாலன்பெர்க் என்ற இந்த சர்வதேச விருது, இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கே சொந்தமானது. வாங்குவதற்கு நான் கருவியாக மட்டுமே இருந்தேன். மக்கள் பணி என்பது மிகப் பெரிய வரம்.எல்லோருக்கும் அந்த வாய்ப்புக் கிடைத்துவிடாது. தமிழகத்தில் ஏதாவதொரு இடத்தில் மனித உரிமை மீறல் நடந்தால்கூட, கதிரைக் கூப்பிடுங்கள் என்ற அளவிற்கு உயர்ந்ததன் காரணம் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை. இங்குள்ள எளிய மக்களைவிட நான் பெரியவன் அல்ல. நியாயம் கிடைக்கும் என்று நம்புகின்ற அந்த நம்பிக்கைக்குக் கிடைத்த விருதாகவே நான் இதை பார்க்கிறேன்” என்றார்.போராளிகளே உத்வேகம்மேலும் இந்த விருதை தனக்காகப் பரிந்துரை செய்த அருட்தந்தை அலோசியஸ் இருதயத்தை எவிடென்ஸ் கதிர் நன்றியுடன் நினைவு கூறுகிறார். மனித உரிமை செயற்களத்தில் பணியாற்றி வரக்கூடிய பல்வேறு போராளிகளே தனக்கு உத்வேகம் அளிப்பதாக பெருமையுடன் பகிர்கிறார்.தாங்கள் பெற்ற விருதாகவே எல்லோரும் எண்ணுவதைவிட தனக்கு வேறு எதுவும் பெருமையில்லை என்கிறார் கதிர். விருது பெறும் நிகழ்வில்கூட தன்னுடைய உரையில் ‘எல்லாப் புகழும் மக்களுக்கே’ என்று குறிப்பிட்டதை பெருமையோடு நினைவுபடுத்துகிறார். நடிகனையும், அரசியல்வாதியையும் கொண்டாடுகின்ற தமிழ்நாட்டில் தன்னைப் போன்ற மக்கள் தொண்டர்களையும் கொண்டாடி மகிழ்வது பெருமைக்குரியதுதானே என்கிறார் கதிர்.தாய்மையின் தியாகம்மனித உரிமை போர்க்களத்தில் நிகழும் பல்வேறு அத்துமீறல்களை உடனுக்குடன் களத்திற்கே சென்று நிவர்த்தி செய்யப் போராடி, அதற்காக அவச்சொற்களையும் சுமந்து, பழிகளையும் ஏற்றுக்கொண்டு வாழ்கின்ற வாழ்க்கை தாய்மையின் தியாகத்திற்கு ஒப்பானது.மதம், சாதி, அரசியல் என பல்வேறு ஆதிக்க முகங்களைக் கொண்ட இந்திய சமூக வாழ்வியலில் உரிமைகளுக்காகப் போராடுவதென்பது மிக மிக சவால் நிறைந்ததாகும். அந்தப் பணிக்காக ‘எவிடென்ஸ்’ கதிர் பெற்றுள்ள ராவுல் வாலன்பெர்க் விருது, மனித உரிமைக் களத்தில் தூண்டிவிடப்பட்டுள்ள சுடரொளி. இதனைக் கையிலேந்தி தொடர்ந்து பயணிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் ஆனதாகும்.

Global recognition for Indian Dalit rights activist

January 21, 2022 | UCA News

Vincent Raj Arokiasamy, a Catholic rights activist from India, has been awarded the Council of Europe’s Raoul Wallenberg Prize for his outstanding contribution to the cause of Dalits.

The award is instituted in memory of a Swedish diplomat who saved thousands of Jews from the Holocaust. It carries a cash honorarium of 10,000 euros (US$11,320) and was presented to Raj, who is based in Madurai in the southern state of Tamil Nadu, in a ceremony held in a hybrid format from Strasbourg, France, on Jan. 19.

“Vincent Raj Arokiasamy has risked his life to help an exceptionally disadvantaged part of the Indian population whose plight is often ignored by national and international communities,” said Marija Pejcinovic Buric, secretary-general of the Council of Europe.

She further noted that the founder of the Madurai-based organization Evidence had rescued some 25,000 victims in 3,000 incidents of human rights violations, reflecting the spirit and values of the prize “in defending human rights with incredible commitment and resilience.”

Speaking to UCA News, Raj said that “the award is in recognition of the work done by my organization as well as many other people and institutions dedicated to the welfare of the disadvantaged and downtrodden in society. It will certainly boost our morale.”

He said the prestigious award had come at the right time. “It is very difficult to work among Dalit and similarly disadvantaged people at this moment. There is so much pressure and many threats from those who do not want these people to come up in society.”

The prize is awarded every two years in recognition of extraordinary humanitarian achievements by a single individual, a group of individuals or an organization

As a result, Raj and his fellow activists at Evidence have had to live apart from their families to protect them. “Many times we too are attacked and threatened with dire consequences, but we refuse to give up,” Raj said.

Congratulating the prize winner, Tamil Nadu Chief Minister M.K. Stalin lauded Raj’s commitment to the cause of Dalits and extended his wishes and support to continue services to the downtrodden.

Joining him was Congress leader Rahul Gandhi, who congratulated Raj and said human rights in India had to be viewed alongside Dalit rights.

Established in 2012 at the initiative of the Swedish government and the Hungarian parliament, the prize was created by the Council of Europe to keep alive the memory of Wallenberg, who used his diplomatic status to save tens of thousands of Jews during the Holocaust