ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மாற்று சமூகத்தினரால் தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
`தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 21 சம்பவங்கள் நடந்துள்ளன. ஊராட்சி மன்றங்களில் அதிக பாதிப்புள்ள பட்டியலின தலைவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்’ என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் அமைந்துள்ளது, வேடல் ஊராட்சி. இயற்கை எழில் கொஞ்சம் விவசாய பூமியான இங்கு 1,200க்கும் மேற்பட்ட மாற்று சமூகத்தினர் வசிக்கின்றனர்.
பட்டியலின மக்களின் எண்ணிக்கை என்பது இருநூறுக்கும் குறைவாகவே உள்ளது. காலம்காலமாக மாற்று சமூகத்தினர் மட்டுமே ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருந்து வந்த நிலையில், இந்தமுறை பட்டியலின சமூகத்துக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவராக பதவிக்கு வந்த கீதாவுக்கு மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்களால் பல்வேறு இடையூறுகள் கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்படுகிறது. வேடல் ஊராட்சியைப் பொறுத்தவரையில் மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது 10 ஆக உள்ளது. இதில் ஏழு பேர் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் கீதாவின் கணவர் மூர்த்தி மீது கொலைவெறித் தாக்குதல் ஒன்று நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்து வருகிறார்.
ஊராட்சி மன்றத் தலைவர் கீதாவை நேரில் சந்தித்து பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
“கடந்த ஐந்து மாதங்களாகவே ஊராட்சித் துணைத் தலைவர் வெங்கடாசலபதி நிறைய பிரச்னைகளை செய்து வந்தார். ஊராட்சி மன்றக் கூட்டத்துக்கு வந்தாலும் தீர்மானத்தில் கையொப்பம் போடமாட்டார். இந்தநேரத்தில், மக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுக்கும் வேலைகள் நடந்தன. அதனை கொடுக்கும்போது என் கணவரும் இருந்தார். `இங்க எதுக்கு வந்த?’ எனக் கேட்டு என் கணவரை சாதி பெயரைச் சொல்லித் திட்டியபடியே வெங்கடாசலபதி அடித்தார். நாங்க போலீஸில் புகார் கொடுத்தோம். இந்தச் சம்பவத்துல எஃப்.ஐ.ஆர் போட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” என்கிறார்.
“கடந்த மாதம் ரோடு போடற வேலை நடக்கும்போது, வேலை சரியாக நடக்கிறதா என என் கணவர் மேற்பார்வை செய்தார். அப்ப வார்டு உறுப்பினர் ரேவதியோட கணவர் ஹரிதாஸ் வந்து சத்தம் போட்டார். அப்ப திடீர்னு என் கணவரை கத்தியால தாக்கி அடித்தார். அவர் மேல புகார் கொடுத்தும் இரண்டு வாரத்துக்குப் பிறகு எஃப்.ஐ.ஆர் போட்டாங்க.”
“மூன்றாவது ராஜகோபால் என்பவர் கோழிப்பண்ணை வைப்பதற்காக தடையில்லா சான்று கேட்டார். `சதுர அடிக்கு 25 ரூபாய் அரசாங்கத்துக்குக் கட்ட வேண்டும்’ எனச் சொன்னோம். `அவ்வளவு பணம் கட்ட முடியாது’ எனச் சொல்லிவிட்டு, `உங்களுக்கு ஐந்தாயிரம் பணம் தர்றேன், கையெழுத்து போடுங்க’ன்னு சொன்னார். `அப்படியெல்லாம் பணம் தர வேண்டாம். நிர்வாகத்துக்குக் கட்ட வேண்டிய பணம் மட்டும் கட்டுங்க’ன்னு சொல்லிவிட்டோம். இதனால வெங்கடாசலபதி, ஹரிதாஸ், ராஜகோபால் என மூன்று பேரும் ஒன்னு சேர்ந்துட்டாங்க. ஏப்ரல் 1 ஆம் தேதி என் வீட்டுக்கு ராஜகோபாலும் அவரோட சில பேரும் வந்து சண்டை போட்டாங்க.”
“என் கணவர்கிட்ட, `அடிச்சா புகார் கொடுப்பியா.. நான் இப்ப அடிக்கறேன், போய் புகார் கொடு’ன்னு சொல்லிட்டு அடிச்சாங்க. கரும்பு, செங்கல், சுத்தியல்னு கைல கிடைச்சதையெல்லாம் வச்சு உயிர் போற அளவுக்கு என் கணவரை அடிச்சாங்க. இதனால தலையில கிராக் விழுந்துருச்சு. நெஞ்செலும்பு உடைச்சிருச்சு. யாரும் உதவிக்கு வரல. இன்னும் கொஞ்சம் விட்டிருந்தா உயிர் போயிருக்கும்” என்கிறார்.
மேலும், “வேடல் ஊராட்சியில இதுவரையில் எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்தவங்க தலைவர் பதவிக்கு வந்ததில்லை. முதல்முறையாக நாங்க வந்திருக்கோம். அந்தக் கோபத்துல கொலைவெறித் தாக்குதல் நடத்திட்டாங்க. அரசு மருத்துவர்கள் சிகிச்சையால என் கணவர் ஓரளவுக்கு குணமாகி வர்றார்” என்கிறார்.
மருத்துவ சிகிச்சையில் இருக்கும் மூர்த்தியிடம் பேசியபோது, “நாங்க அந்தக் கிராமத்துல வாழக் கூடாதுன்னு நினைக்கறாங்க. மக்களுக்கு நல்லது செய்யணும்னுதான் பதவிக்கு வந்தோம். ஆனா சில பேரு நிம்மதியா வேலை செய்ய விடமாட்டேங்கறாங்க. முதலமைச்சர்தான் நடவடிக்கை எடுக்கணும்” என்கிறார்.
இதையடுத்து, வேடல் கிராமத்துக்குச் சென்றோம். ஊர் முழுக்கவே பெருத்த அமைதியில் இருந்தது. ஒரு எஸ்.ஐ தலைமையில் மூன்று போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது. “அன்று ஒருநாள் மட்டும்தான் பிரச்னை ஏற்பட்டது. இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை” என்கிறார், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ ஜெய்சங்கர்.
அடுத்து, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றோம். சுமார் 15 குடும்பங்கள் மட்டுமே அங்கு வசிக்கின்றன. அங்கிருந்த சிலரும் பேசுவதற்கு தயக்கம் காட்டிவிட்டு விலகிச் சென்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “அன்னைக்கு ஏழு பேர் சேர்ந்து தலைவரோட வீட்டுக்காரரை அடிச்சாங்க. அவர் வலி தாங்க முடியாம வேற வீட்டுக்குள்ள போனார். அங்கயும் போய் அடிச்சாங்க” என்றவர், “ நாங்க அந்தப் பகுதி மக்களைத் தாண்டித்தான் வெளிய போகணும். இந்த சம்பவத்தால் சில பேரு வேற ஊருக்குப் போயிட்டாங்க. பேசவே பயமா இருக்கு” என்றார்.
அங்கிருந்து மாற்று சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றோம். வேடல் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வெங்கடாசலபதியிடம் பேசுவதற்குப் பலமுறை முயன்றும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து, ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் வி.கே.ராகவனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
“கீதாவின் கணவர் மூர்த்தி சொல்வது அனைத்தும் பொய். எதை எடுத்தாலும் அவர் சாதி மையமாக வைத்துப் பேசுகிறார். காலனி மக்களோடு காலம்காலமாக ஒற்றுமையாகப் பழகி வருகிறோம். அவர்கள் தெருவில் திருவிழா நடந்தால் நாங்கள் கூழ் ஊத்துவோம். எங்க திருவிழாவுக்கு அவங்க வருவாங்க. வெளியூரில் இருந்து இங்கு வந்து போட்டியிட்டு கீதா பதவிக்கு வந்தார். அவங்களாலதான் பிரச்னையே” என்கிறார்.
“எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்தவர் பதவிக்கு வந்துவிட்டதால் அந்தக் காழ்ப்புணர்ச்சியில் தாக்குதல் நடந்ததாகச் சொல்கிறார்களே?” என்றோம்.
“அப்படியெல்லாம் இல்லை. ஊராட்சியின் துணைத் தலைவரான வெங்கடாசலபதி சில பணிகளுக்காக 2 லட்ச ரூபாய்க்கு கையொப்பம் போட்டுக் கொடுத்தார். அதுதொடர்பான கணக்கு வழக்குகளைக் கேட்டதற்காக சாதி பெயரைச் சொல்லி திட்டியதாகப் புகார் கொடுத்துவிட்டனர். ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் பணத்தைச் சுருட்டும் முயற்சியில் மூர்த்தி ஈடுபட்டு வந்தார். இதைத் தட்டிக் கேட்டதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றில் உள்ள பிரமுகர்களின் தூண்டுதலில் அவர் செயல்படுகிறார்” என்கிறார்.
அதேநேரம், வேடல் ஊராட்சி மட்டுமல்லாமல் ராணிப்பேட்டையில் உள்ள பாராஞ்சி, மூதூர் ஆகிய ஊராட்சிகளில் தலைவர்களாகப் பதவி வகிக்கும் பழங்குடியின சமூகத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாகக் குற்றம் சுமத்துகிறார், அரக்கோணம் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரவீன்குமார்.
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவதை மாற்று சமூகத்தினர் விரும்புவதில்லை. இதனால் தொடர்ச்சியாக தொல்லைகளைக் கொடுக்கின்றனர். வேடல் கிராமத்தில் உயிருக்கு ஆபத்தாகும் அளவுக்கு ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரைத் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக, அரசுத் துறைகளில் முறையிட்டாலும் உரிய தீர்வு கிடைப்பதில்லை. மூன்று முறை தாக்கும் வரையிலும் காவல்துறை அமைதியாகத்தான் இருந்தது. புகார் கொடுத்தபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் மூர்த்திக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்காது” என்கிறார்.
ஆனால், இந்தச் சம்பவங்கள் தொடர்பாக அரக்கோணம் தாலுகா டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் அளித்த விளக்கம் என்பது முற்றிலும் வேறாக இருந்தது. அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “வேடல் கிராமத்தைப் பொறுத்தவரையில் எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எம்.பி.சி பிரிவைச் சேர்ந்த ராஜகோபால், கோழிப் பண்ணை அமைப்பதற்காக ஊராட்சித் தலைவரிடம் ஒப்புதல் கேட்டார். இதற்காக தலைவரின் கணவர் பெரிய தொகையை கேட்டு வாங்கியுள்ளார். ஆனால், எதையும் செய்து தரவில்லை. தொடர்ந்து கொடுத்த பணத்தைக் கேட்பதற்காக ராஜகோபால் தரப்பினர் கேட்கச் சென்றபோது தாக்குதல் நடந்தது. அதேநேரம், அப்படியொரு தாக்குதல் சம்பவத்தை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் ராஜகோபால் உள்ளிட்ட சிலரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்கிறார்.
“மேலும் சில ஊராட்சிகளிலும் பட்டியலின, பழங்குடியின ஊராட்சித் தலைவர்களுக்கு இடையூறுகள் நேர்வதாகச் சொல்லப்படுகிறதே?” என்றோம்.
“உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பதவிக்கு வந்தனர். இதனால் ஒரு சில ஊராட்சிகளில் பிரச்னை ஏற்படுகிறது. சில இடங்களில் துணைத் தலைவர்கள் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். பாராஞ்சி ஊராட்சியில் தலைவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். துணைத் தலைவர் எம்.பி.சி பிரிவைச் சேர்ந்தவர். இதில் சில மனக்கசப்புகள் ஏற்பட்டன. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், “ஊராட்சி மன்றத் தலைவர்களாக பெண்கள் இருந்தால் அவர்களது கணவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் பிரச்னை ஏற்படுகிறது. இதன் அடுத்தகட்டமாக கிரிமினல் குற்றங்கள் நடக்கின்றன. எஸ்.சி, எஸ்.டி பிரிவில் வழக்குகள் வந்தால் உடனே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அந்தவகையில், நான் பதவியேற்ற எட்டு மாதங்களில் 16க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிராமங்களில் ரோந்து செல்வது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது” என்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பட்டியலினத்தைச் சேர்ந்த உள்ளாட்சித் தலைவர்களின் மீது நடத்தப்பட்ட 21 சம்பவங்களின் மீது தாங்கள் கள ஆய்வினை மேற்கொண்டதாகக் கூறுகிறார், மதுரையைச் சேர்ந்த `எவிடென்ஸ்’ கதிர்.
இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய அவர், “அண்மைக்காலமாக பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் மீது தாக்குதல்களும் தீண்டாமையும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம், வேடல் ஊராட்சித் தலைவரின் கணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஊத்துமலை ஊராட்சித் தலைவர் வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்தது. இதற்குக் காரணம், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் பதவிக்கு வருவதை மாற்று சமூகத்தினர் சிலர் ஏற்பதில்லை” என்கிறார்.
“தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தடுப்பது, நாற்காலியில் அமரவிடாமல் செய்வது, காசோலையில் கையொப்பம் போடாமல் மறுப்பு தெரிவிப்பது, கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பது எனப் பல கொடுமைகள் நடக்கின்றன. பட்டியலின ஊராட்சித் தலைவர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தாலே அவர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015 பிரிவு (3)(1) M பிரிவின்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சட்டம் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இந்தப் பிரிவில் இதுவரையில் ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை” என்கிறார்.
“அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சரும், `வன்கொடுமையை ஒருநாளும் ஏற்க முடியாது; கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்தார். பட்டியலின உள்ளாட்சித் தலைவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். மாநிலத்தில் உள்ள ஆபத்தான ஊராட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஆவண செய்யும் என நம்புகிறோம்” என்கிறார் எவிடென்ஸ் கதிர்.
சட்ட மேதை டாக்டர் அம்பேத்காரின் பிறந்தநாளை சமத்துவ நாளாகக் கடைபிடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் சமத்துவ உறுதிமொழி எடுத்துக்கொண்ட நிலையில், பட்டியலின பஞ்சாயத் தலைவர்கள் மீதான வன்கொடுமைகள் குறித்து வெளியாகியிருக்கும் ஆய்வறிக்கை அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்து மனித உரிமைச் செயல்பாட்டாளரான எவிடென்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குநர் கதிரிடம் பேசினோம். “பட்டியலின பஞ்சாயத்துத் தலைவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள்மீதும் நடைபெறக்கூடிய வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. பட்டியலினத்தவர் ஒருவர் அதிகாரத்தில் இருக்கிறார் என்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சாதி வெறியர்கள் இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களில் 21 சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் மட்டும் இத்தகைய கொடூரத் தாக்குதல்கள் இரண்டு நடந்துள்ளன. தென்காசி அருகிலுள்ள ஊத்துமலை, இதுவரை பொதுப் பஞ்சாயத்தாக இருந்தது. கடந்த 2016-ம் ஆண்டு இந்தத் தொகுதி பட்டியலினப் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டது.
ஊத்துமலை கூட்டுறவு வங்கிச் செயலாளராக இருக்கும் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த அய்யனார், தன் மனைவி வளர்மதியைத் தேர்தலில் நிறுத்த முயன்றிருக்கிறார். இதனால் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஊத்துமலை முன்னாள் ஊராட்சித் தலைவர் தாய்குலம் (எ) கருப்பசாமி பாண்டியன் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.
சிவக்கனி என்பவர் மூலம் அய்யனார்மீது பல பொய்ப் புகார்களை அரசு அதிகாரிகளுக்கு அனுப்பிவைப்பது, மிரட்டுவது எனப் பல்வேறு அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பொய்ப் புகாரால் ஒரு கட்டத்தில் அய்யனார் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.
இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஊராட்சித் தேர்தலில் ஊத்துமலை ஊராட்சியில் வளர்மதி நிற்க எதிர்ப்பு தெரிவித்து ராஜகுமாரி என்கிற பெண்ணை தாய்குலம் (எ) கருப்பசாமி பாண்டியன் நிறுத்தினாலும் வளர்மதி வெற்றிபெற, ஆத்திரமடைந்த தாய்குலம் (எ) கருப்பசாமி பாண்டியனின் அக்காள் மகன் மலையரசன் ஆகியோர் அன்று இரவே அரிவாளுடன் வளர்மதி வீட்டுக்குச் சென்று, அய்யனாரைப் பார்த்து, ‘உன் பொண்டாட்டி எப்படி பஞ்சாயத்துத் தலைவர் ஆகலாம்… அவளை வெட்டாமல் விட மாட்டேன்’ என்று கத்திக்கொண்டு வர அங்கிருந்தவர்கள் பிடித்துள்ளனர்.
கடந்த 23.03.2022 அன்று ஊத்துமலை பஞ்சாயத்துத் தலைவர் வளர்மதியும், கணவர் அய்யனாரும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்துகொண்டு மாலை ஊத்துமலைக்குய்ஜ் திரும்பியுள்ளனர்.
அங்கு நிறைகுளத்தான் (எ) கொத்தாலிகுமார் தலைமையில் ஆறு பேர்கொண்ட கும்பல் உள்ளாடையுடன் நின்றுகொண்டு, அவர்களைப் பார்த்து ஆபாசமாகவும் இழிவாகவும் பேசியிருக்கிறது.
அங்கிருந்த அய்யனாரின் உறவினர்கள், இப்படிப் ஆபாசமாக பேசலாமா என்றதற்கு, பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கடுமையாக அவர்களைத் தாக்கியிருக்கின்றனர்.
ஆடைகளைக் கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஏழு பட்டியலினத்தவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் பரமேஸ்வரி என்பவர் படுகாயமடைந்துள்ளார். பஞ்சாயத்துத் தலைவர் வளர்மதியும், அவர் கணவர் அய்யனாரும் அந்த கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 20 நாள்களாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பரமேஸ்வரி சிகிச்சை எடுத்துவருகிறார். குற்றவாளிகளில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் அரக்கோணம் அருகிலுள்ள வேடல் பஞ்சாயத்தின் தலைவரான பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த கீதாவின் கணவர் மூர்த்தியை, கடந்த 01.04.2022 அன்று ஆறு பேர்கொண்ட கும்பல், சுத்தியாலும் பெரிய கற்களாலும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மூர்த்தி, தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவருகிறார்.
இதுவரை பொதுத் தொகுதியாக இருந்த வேடல் பஞ்சாயத்து 2021-ம் ஆண்டு தலித் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தலில் நின்று கீதா வெற்றிபெற்றுள்ளார். துணைத் தலைவரான வெங்கடாஜலபதி காசோலையில் கையெழுத்திட மறுப்பது, கூட்டம் நடத்தவிடாமல் தடுப்பது, நாற்காலியில் உட்காரக் கூடாது என மிரட்டுவது எனப் பல்வேறு வன்கொடுமைகளை கீதாவிடம் கடைப்பிடித்துவந்துள்ளார்.
கடந்த ஜனவரி 2022 மாதம் பொங்கல்விழாவை முன்னிட்டு நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய பொருள்களை விநியோகிக்கும்போது அங்கு வந்த வெங்கடாஜலபதி, கீதாவின் கணவர் மூர்த்தியை, பலர் முன்னிலையில் சாதிரீதியாக இழிவாகப் பேசி தாக்கியிருக்கிறார்.
சாலையை ஆக்கிரமிப்பு செய்திருந்த ஹரிதாஸ் என்பவர். கீதாவின் கணவர் மூர்த்தியை சாதிரீதியாக இழிவாகப் பேசி தாக்கியிருக்கிறார்.
தொடர்ந்து மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் கோழிப்பண்ணை வைக்க என்ஓசி கேட்டதற்கு ஆவணங்கள் கேட்டதால், கடந்த 01.04.2022 அன்று இரவு ராஜகோபால், அருண், சிவா, சங்கர், அஜித், கிச்சான் (எ) கமலேஷ் உள்ளிட்ட கும்பல் கீதா வீட்டடுக்கு வந்து அவர் கணவர் மூர்த்தியை அசிங்கமாக பேசிக்கொண்டே இரும்பு சுத்தியால் தலையில் ஓங்கி அடித்துள்ளார்கள்.
கூட வந்தவர்களும் செருப்புக் காலால் மிதித்து, பெரிய கற்களைக்கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். தடுக்கச் சென்ற கீதாவையும் ஆபாசமாகப் பேசி தாக்கியிருக்கின்றனர். உயிருக்கு பயந்து ஒவ்வொரு வீடாக கீதாவும் மூர்த்தியும் சென்றுள்ளனர்.
தற்போது மூர்த்தி சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சையெடுத்துவருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. தலை, நெஞ்சு, முகம் என்று உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. குற்றத்தில் ஈடுபட்டவர்களில் ராஜகோபால், அருண், சிவா, சங்கர் ஆகிய நான்கு பேர் மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதுபோல் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் 21 பட்டியலின பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்தும், தீண்டாமை குறித்தும் எவிடென்ஸ் அமைப்பு கள ஆய்வு மேற்கொண்டுள்ளது.
நடந்த 21 சம்பவங்களில் தேனி மாவட்டத்தில் 3-ம், மதுரை மாவட்டத்தில் 3-ம், சிவகங்கை மாவட்டத்தில் 2-ம், திருப்பூர் மாவட்டத்தில் 2-ம் திருவண்ணாமலை, கடலூர், சேலம், திருவள்ளுர், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, தருமபுரி, அரியலூர், ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இத்தகைய சம்பவங்களும் நடந்துள்ளன.
பட்டியலினத்தவர்கள், பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்களாக, உறுப்பினர்களாக பொறுப்புக்கு வருகிறபோது மாற்றுச் சமூகத்தினரில் சிலர் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சாதிரீதியாக இத்தகைய தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இது அப்பட்டமான சாதிய வன்கொடுமை.
பட்டியலின பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புறத் தலைவர்கள், உறுப்பினர்களைப் பணி செய்யவிடாமல் குறுக்கீடு செய்தால் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015, பிரிவு 3(1)(m)ன் கீழ் மிகப்பெரிய குற்றம்.
ஆகவே, தமிழக அரசு பட்டியலினத் தலைவர்கள் மீது சாதிரீதியாகத் தாக்குதலில் ஈடுபடுவது, அவர்களைப் பணி செய்ய விடாமல் தடுப்பது போன்ற வன்கொடுமையில் ஈடுபடும் நபர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகம் முழுவதும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். பொது அறிவிப்பாக வெளியிட வேண்டும்.
சாதிரீதியாக குறுக்கீடு செய்பவர்கள் துணைத் தலைவராகவோ மற்ற உறுப்பினர்களாகவோ இருக்கிறபட்சத்தில் அவர்களை பொறுப்பு நீக்கம் செய்ய வேண்டும். அச்சுறுத்தல் இருக்கக்கூடிய பட்டியலினத் தலைவர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றார். தமிழக அரசு இந்தப் புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
In the last two years, 15 districts of Tamil Nadu had witnessed attacks on 21 Dalit elected representatives in rural local bodies by caste Hindus, Evidence executive director A. Kathir said here on Thursday.
The latest such attacks had been reported in Tenkasi and Arakkonam. A fact-finding team from Evidence visited both the places and interacted with the victims and their relatives as well as revenue and police officials.
Speaking to The Hindu, Mr. Kathir, who was also a member of the team, said in Tenkasi district, a Scheduled Caste woman, Valarmathi, wife of Ayyanar, contested the rural local body election in Uthumalai in 2021 and became the panchayat president. Unable to accept a Dalit woman as local body chief, a caste Hindu family repeatedly threatened her and her husband.
Mr. Ayyanar, who was secretary of Uthumalai Cooperative Bank, was suspended based on “false statements”. On March 23, seven caste Hindus entered the house of Ms. Valarmathi and verbally abused her. They also roughed up some of her relatives, including her sister-in-law Parameswari, who was now under treatment at Tirunelveli Government Medical College Hospital.
The police had booked cases against the accused under the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 2015, Mr. Kathir said.
In Arakkonam, Geetha from a Scheduled Caste, who was the panchayat president of a village, was ill-treated by the vice president. The fact-finding team found that Ms. Geetha was questioned whenever she sat on a chair, and she was expected to sit on the floor. The cheques for panchayat transactions should be signed by both Ms. Geetha and her deputy. However, he allegedly refused to sign them, which resulted in delays in executing works.
On April 1, when Ms. Geetha and her husband Moorthy were at home, a seven-member gang assaulted Mr. Moorthy with knives and hurled stones at their house. Mr. Moorthy had been admitted to a government hospital in Chennai. Though the police had arrested four persons, the others were absconding, Mr. Kathir said.
Similar incidents had happened in Theni, Madurai, Sivaganga, Tirupur, Tiruvannamalai, Cuddalore, Salem, Tiruvallur, Coimbatore, Krishnagiri, Myladuthurai, Dharmapuri, Ariyalur, Ranipet and Tenkasi districts, he added.
He urged Chief Minister M.K. Stalin to ensure protection to Dalit elected representatives in rural areas and arrest of the assailants.
The last time A Boominathan saw his wife was at Sivaganga taluk police station in the last week of December 2014, barely 10 days after they had got married. Threatened, beaten up and forced to leave his native Sivaganga, Boominathan was in Chennai in March 2015 when while reading the newspaper he chanced upon a report of a woman murdered in rural Sivaganga for marrying outside her caste. “It was my wife Tamilselvi,’’ says Boominathan.
Boominathan, a dalit from Udaikulam village in Sivaganga, worked as a car driver when he fell in love with Tamilselvi, a konar, from the same village. The couple got married and were living in Srivaikuntam when they were hunted down with the help of police. Tamilselvi’s family took her away forcibly.
Six people including Tamilselvi’s father were booked in the case. But seven years on, Boominathan awaits justice. “Forget justice, not even a trial has begun,” says Boominathan.
The trial in the murder of dalit youth Gokulraj has ended and the culprits have been punished. But there are several other caste killings in the state, like that of Tamilselvi, which are in the courts for years.
“I don’t even know the status of the case,’’ says C Krishnaperumal, uncle of M Gopalakrishnan, who was murdered, for falling in love with his college mate, a vanniyar, from the neighhbouring Bargursavadi village. Similar to the Gokulraj case, Gopalakrishnan was last seen with the girl in December 2012. When his father Mayakrishnan approached police, a missing case was filed.
“There was no effort to probe the whereabouts of Gopalakrishnan. We filed a habeus corpus petition in the Madras high court. That’s when police said a body was found in a lake and it was that of Gopalakrishnan,” said Krishnaperumal. The last hearing of the case at the district court was
three years ago.
Mayakrishnan had to mortgage his house to get his elder daughter married and is now toiling to get two of his daughters married. “We neither have the money nor support for the legal battles,” said Krishnaperumal.
In Cuddalore, Sathish Kumar is happy that at least the hearing is over in the case of the murder of his wife Bhavani.
“The hearing was over long ago. But there is no sign of a judgment,’’ he said. Sathish Kumar, a dalit, was working in a garment unit in Tirupur when he fell in love with Bhavani, 25, belonging to the thevar community from |, Ramanathapuram in 2012. As Bhavani’s family objected, they got married and began living in Tirupur.
“I got a job in Malaysia and had to leave. We had two children by that time. Bhavani’s grandparents asked her to live with them in Ramanathapuram, though her parents distanced themselves,” he said. Sathish was in Malaysia when he was told that his wife was murdered.
Initially, police suspected that it was Bhavani’s brother who took her to their home and killed her. “But my son, then six years old, told police that Bhavani’s parents were also there. They held her when her brother attacked her with a knife,” he said.
A Kathir, executive director of Evidence, an NGO, who has helped many victims fight the cases legally, said that in the past 20 years judgments for only six such cases have been delivered, which includes the Kannagi-Murugesan case, the Udumalpet Sankar case and the Gokulraj murder case.
“This was because there were eyewitnesses who came forward for Gokulraj and Sankar cases. In most of these incidents, the accused are family members of the victim. So in those cases there is no one to pursue the case legally,” he said, adding that there are several instances of witnesses turning hostile too.
Advocate P Rathinam, who pursued the infamous Kannagi-Murugesan case and got the judgment delivered after 18 years of legal struggle, said the problem starts from the investigation stage. A biased police force, indifferent bureaucracy, lack of political will to go after the perpetrators of caste killings out of fear of antagonising dominant castes and poor financial background of victims lead to a delay in cases.
“Field reality is very bad. Even dalit parties do not offer proper support till the end in these cases,” Rathinam said.
While there is a growing call for a separate legislation for caste killing cases, Gowthama Sanna, deputy general secretary of Viduthalai Chiruthaigal Katchi, said a statutory body should be set up to monitor and probe these cases. “Ingrained caste bias at all levels, particularly in the police department prolongs investigations. So an independent body should be created to ensure time bound completion of the probe,” he said.
She was forcibly made to work in the unit
After a WhatsApp post, circulated among a group in Madurai was shared with an activist, a Dalit woman allegedly working in a brick-kiln as bonded labourer was safely rescued by a team from Evidence, an NGO working for the rights of the SCs with support from the revenue and police officials in Madurai on Friday.
Speaking to The Hindu on Saturday, Evidence executive director A. Kathir said Perumalakka (42) and her husband Palpandi (47) were working in a brick-kiln unit at Thevaseri village near Alanganallur in Madurai since April 2021. They had reportedly received ₹1.50 lakh from the employer, identified as Chellapandi.
After working for about eight months in the brick-kiln unit for long hours everyday, the couple had informed the employer that they were exhausted and would like to go back to their home at Thathampatti village in Madurai. Seeking some time to repay the money she owed to Chellapandi, she came back from the brick-kiln unit.
According to a fact finding team’s report, Perumalakka had joined another private brick-kiln unit near her dwelling and, as promised, went to Chellapandi’s place and gave him ₹50,000 as a part payment. When Chellapandi refused to take the money and insisted her to return to work, she explained her inability. “ My husband had a fall and broke his hand. He was also in a state of depression,” she had told.
However, Chellapandi’s relatives, including his wife Kalpana, who were in no mood to listen, had gone to Perumalakka’s dwelling and forcibly brought her to Thevaseri village to work in their brick-kiln, her son Pandi Murugan had informed the Vadipatti police in a complaint lodged on March 14.
Though the police had given a CSR certificate to the complainant, the issue drew the attention of the Superintendent of Police Baskaran after the Evidence team members narrated the woes of Perumalakka and Palpandi.
Demanding the police to arrest all the five accused immediately, Mr. Kathir urged the Tamil Nadu government to provide a relief of ₹1.25 lakh to the couple and their son, and also a piece of land measuring 2400 square feet in their village, where they could perform some farm activity.
The Vadipatti police have registered a case under IPC Sections 147 and 365, under the Bonded Labour System (Abolition) Act, 1976 and SC/ST Prevention of Atrocities Amendment Act 2015.
Tirupur: The call to drop the state government’s move to evict scheduled caste dwellers from government land in Tirupur district has been growing with every passing day.
About 135 dalit families have been living along the bund of a lake at Samalapuram village in Tirupur district for more than 100 years.
On March 1, the state water resources department served notices to the 135 families there to vacate their houses, stating that they have encroached on the land belonging to the adjacent waterbody. The notices have spurred a protest by the residents for the past fortnight.
Representatives of Evidence, a human rights NGO who went on a fact finding visit to Samalapuram said that the residents were poor Arunthathiyar families living in the land for more than five generations.
He said that patta has been issued to people belonging to dominant castes living along the lake bund, but dalits are victimised.
“There is a four-lane road running close to the lake, there are grooves and private buildings near the water body. Those landowners have been issued patta, but dalits alone are denied patta,’’ alleged A Kathir, executive director of Evidence.
Stating that there was a wide space between the lake bund and the dwellings, he said there was enough evidence to prove that the residents were living there for more than 100 years.
They were paying house tax, water tax and electricity bills for decades, he said.
He cited a Supreme Court verdict which said that exceptions shall be given while evicting encroachment in case of landless labourers or members of scheduled caste and scheduled tribes.
“The state government should withdraw the notices issued to vacate the house and should issue pattas to the residents,” he said.
Meanwhile, Coimbatore MP P R Natarajan staged a protest in front of Tirupur collectorate demanding to drop the move to evict the dalits. He demanded the government to reclassify the land as natham poramboke and issue them pattas.
Madurai-based NGO Evidence has urged the State government to withdraw attempts to evict the Scheduled Caste residents of Samalapuram village near Palladam in Tiruppur district and take steps to issue pattas to the residents.
In a statement issued on Friday, Executive Director of Evidence A. Kathir said that a fact-finding team from the NGO visited Samalapuram on March 14, two weeks after the Water Resources Department on March 1 sent a notice to 135 families claiming that they had encroached on the banks of the Samalapuram tank and that the encroachments must be removed.
“There is a large gap between the banks of the waterbody and where the Dalit people reside. Moreover, they have constructed their houses till the main road. They have been residing here for nearly 100 years,” Mr. Kathir said based on the findings of the team. The SC residents possessed necessary government documents such as ration cards and voter identity cards and they had neither been affected by the Samalapuram tank nor damaged the waterbody, he added.
Citing the Supreme Court’s judgment in the 2011 ‘Jagpal Singh and Others versus State of Punjab’ case, he asserted that governments cannot retrieve lands from landless labourers and members of Scheduled Castes and Scheduled Tribes.
In its recommendations, Evidence said that the District Collector must conduct a grievance redress meet for the SC residents at Samalapuram and provide basic amenities to them. The State government must also issue an order to hand over lands to members of Scheduled Castes and Scheduled Tribes, who had been staying on government-owned lands for a minimum of 20 years or those who had been regularly paying their taxes to the State government, the statement added.
On Friday, members of the Communist Party of India (Marxist) led by Coimbatore MP P.R. Natarajan staged a demonstration outside the District Collectorate in Tiruppur condemning the eviction attempts in Samalapuram and demanding pattas for the SC residents.
தமிழ்நாட்டில் ‘காதல் விவகாரத்தால் ஆண்டுதோறும் 120 முதல் 150 கொலைகள் நடக்கின்றன. ஆனால், சாதி ஆணவக் கொலைகள் தொடர்பாக அரசிடம் மிகச் சொற்பமான தகவல்களே உள்ளன’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் என்பவர் கொலை வழக்கில், தீரன் சின்னமலை பேரவையை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு சாகும் வரையில் ஆயுள் சிறை விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில், கொலையான கோகுல்ராஜுக்கும் யுவராஜுக்கும் தனிப்பட்ட முன்விரோதம் எதுவும் இல்லை எனவும் மாற்று சாதியை சேர்ந்த பெண்ணை, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் காதலித்தார் என்பதற்காகவே கொல்லப்பட்டதையும் நீதிபதி சம்பத்குமார் விவரித்திருந்தார்.
இதற்கு முன்னதாக, உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கு, திருவாரூர் அபிராமி வழக்கு, நெல்லை கல்பனா வழக்கு, நாகப்பட்டினம் அமிர்தவள்ளி வழக்கு, கண்ணகி – முருகேசன் வழக்கு என ஆணவப் படுகொலை தொடர்பான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் சில வழக்குகள் மேல்முறையீட்டின்போது நீர்த்துப் போவதையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆணவப் படுகொலைகள் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுப்பது தொடர்பாக 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
அதில், ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகவும் அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களை தண்டிப்பதற்காகவும் சிறப்புச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும்’ என பரிந்துரை செய்துள்ளது. இப்படியொரு சட்டம் இயற்றப்படும் வரையில் மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியுள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
“தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன. ஆனால், அதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் தொடங்கவில்லை” என்கிறார், மதுரையை சேர்ந்த எவிடென்ஸ் அமைப்பின் கதிர்.
“தனிச்சட்டம் இயற்றப்படுவதற்கு சாதகமாக உச்ச நீதிமன்றத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தீர்ப்புகள் உள்ளன. இதுதவிர, உயர் நீதிமன்றங்களிலும் பல்வேறு தீர்ப்புகள் வந்துள்ளன. குறிப்பாக, லதாசிங் எதிர் உத்தரபிரதேச வழக்கில், `கலப்புத் திருமணம் செய்வதற்கு இந்து திருமணச் சட்டம் தடையாக இல்லை’ எனக் கூறியுள்ளனர். அதேபோல், ஆறுமுகம் சேர்வை எதிர் தமிழ்நாடு வழக்கில், ‘காப் பஞ்சாயத்தும் கட்டப்பஞ்சாயத்தும் ஒன்றுதான். இவை இரண்டும் மோசமான விஷயங்கள். இவை ஜனநாயகத்துக்கு எதிரானது’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அடுத்து, விகேஷ் யாதவ் எதிர் உத்தரபிரதேச வழக்கிலும், ஆஷா ரஞ்சன் எதிர் பிகார் வழக்கிலும், `திருமணம் செய்து கொள்வதற்கான முடிவை எடுக்கும் அனைத்து அதிகாரங்களும் பெண்களுக்குத்தான் உள்ளது. அவர்களது தேர்வில் யாரும் குறுக்கீடு செய்யக் கூடாது. அவர்களின் சுயமரியாதையைக் கேள்வி கேட்கக் கூடாது’ எனக் கூறப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடுகிறார் எவிடென்ஸ் கதிர்.
“மரண தண்டனை மீது எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் கிருஷ்ணா மாஸ்டர் எதிர் உ.பி என்ற வழக்கில், `அனைத்து ஆணவக் கொலைகளுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும்’ எனத் தீர்ப்பு வந்தது. மேலும், 2012ஆம் ஆண்டு தேசிய சட்ட ஆணையம் வரைவு ஒன்றைக் (Prohibition of Unlawful Assembly (Interference with the Freedom of Matrimonial Alliances) கொண்டு வந்தது.
அதில், ஆணவக் கொலைகள் என்பது பிகாரிலோ, உ.பியிலோ, பஞ்சாப்பில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டிலும் நடக்கிறது என்பதைக் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு ஆணவக் கொலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததன் விளைவால், தேசிய சட்ட ஆணையத்தின் வரைவில் தமிழ்நாடு இடம்பெற்றிருந்தது.
இவைபோக, 2018ஆம் ஆண்டு சக்திவாகிணி வழக்கில் 20 வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதில், `இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும், தலைமை செயலாளர் தலைமையில் கிராமம், தாலுகா, மாவட்டம் வாரியாக எங்கெல்லாம் கலப்புத் திருமணம் நடந்துள்ளதோ அதனைக் கணக்கெடுக்க வேண்டும், அவர்களுக்கு ஆபத்து இருப்பது தெரியவந்தால் தன்னிச்சையாக அந்த வழக்கை கையில் எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்” என்கிறார்.
இந்த வழக்கில் சொல்லப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, சாதிப் பஞ்சாயத்து நடந்தால் அதற்குக் காரணமானவர்களை எச்சரிக்க வேண்டும்; தலையீடு செய்தால் வழக்கு பதிவு செய்வோம் என எச்சரிப்பது, பதற்றம் ஏற்பட்டால் 144 தடை உத்தரவை போடுவது, பஞ்சாயத்து நடப்பதை வீடியோ எடுப்பது, அதனைத் தடுக்க முற்பட்டால் வழக்குப் பதிவு செய்வது என வகைப்படுத்தியுள்ளனர்.
மேலும், கலப்பு மணம் செய்தவர்களுக்குப் பிரச்னைகள் அதிகம் இருந்தால் அவர்களுக்குத் தனி வீடு எடுத்துக் கொடுத்து அவர்களுக்கான உணவு மற்றும் இதர செலவுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. “இந்தத் தீர்ப்பு 2018 மார்ச் மாதம் வந்தாலும் அதற்கு முன்னதாக 2013ஆம் ஆண்டில் இருந்தே ஆய்வு நடத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியும் எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை” என்கிறார் கதிர்.
‘தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் சரியாக உள்ளதா?” என்றோம். “இதுதொடர்பாக, தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் சில தகவல்களை வாங்கியுள்ளோம். குறிப்பாக, `2016 ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் எத்தனை ஆணவக் கொலைகள் நடந்துள்ளன?’ எனக் கேட்டிருந்தோம். இதற்குத் தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள பதிலில், நான்கு கொலைகள் மட்டுமே நடந்துள்ளதாக கூறுகிறது. நெல்லையில் 1, திருப்பூரில் 1, தூத்துக்குடியில் 2 எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், நாங்கள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட வழக்குகளே அறுபதுக்கும் மேல் இருக்கும். அரசு கொடுத்த புள்ளிவிவரம் என்பது குறைவாக உள்ளது. மேற்கண்ட நான்கு வழக்குகளிலும் ஏழு பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். இதுதவிர, கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகள் தொடர்பாக ஆறு தீர்ப்புகள் வந்துள்ளன.
இதில், நான்கு வழக்குகளில் செசன்ஸ் நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்தாலும் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். கண்ணகி – முருகேசன் மற்றும் கோகுல்ராஜ் ஆகிய வழக்குகளுக்கு இன்னும் மேல்முறையீட்டுக்குச் செல்லவில்லை” என்கிறார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் நடக்கும் காதல் விவகாரம் தொடர்பான கொலைகள் குறித்துப் பேசும் கதிர், “ஆண்டுதோறும் 120 முதல் 150 கொலைகள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் ஆணவக் கொலைகளாகத்தான் பார்க்க வேண்டும். கோகுல்ராஜ் வழக்கில் யுவராஜுக்கும் அவருக்கும் முன்னரே எந்தவிதத் தொடர்பும் இல்லை. இதைத்தான் காப் பஞ்சாயத்து என்கின்றனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு தருமபுரியில் உள்ள நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனியில் இளவரசன் விவகாரம் தொடர்பாக சாதிக் கலவரம் வெடித்தபோது பிற்படுத்தப்பட்டோருக்கான அணியை ராமதாஸ் உருவாக்கினார். இதன் தொடர்ச்சியாகத்தான் யுவராஜின் செயல்களைப் பார்க்க முடிகிறது” என்கிறார்.
“நாட்டில் உள்ள சட்டங்களே போதுமானதாக இருக்கும்போது தனிச்சட்டம் அவசியமா?” என்றோம்.
“தனிச்சட்டம் தேவைப்படுவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. பட்டியலினத்தைச் சேர்ந்தவராக ஆணும் பிற சமூகத்தைச் சேர்ந்தவராக பெண்ணும் இருந்தாலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும். ஒருவேளை பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்ணை கொலை செய்தால் அதனை எஸ்.சி, எஸ்.டி பிரிவில் கொண்டு வர முடியாது. காரணம், இந்தப் பிரிவுகளைப் பொறுத்தவரையில் பாதிக்கப்படுகிறவர்கள் எஸ்.சி, எஸ்.டியாக இருக்க வேண்டும். ஆனால், கொலைக்குப் பொதுவான காரணமாக சாதி உள்ளது.