News on Press

Survivor of Udumalpet honour killing writes to CM

May 16, 2023 08:23 pm | THE HINDU

She urges Stalin to ensure T.N.’s appeal preferred in SC against Madras HC judgment is listed for further hearing early; Kathir of Evidence urges govt to give more attention to the case

Kausalya, survivor of the Udumalpet honour killing, during an interaction with The Hindu in Madurai on Tuesday. | Photo Credit: R. Ashok

Kausalya, survivor of the Udumalpet honour killing, during an interaction with The Hindu in Madurai on Tuesday. Kausalya, survivor of the Udumalpet honour killing, during an interaction with The Hindu in Madurai on Tuesday.

Activist Kausalya has urged the Tamil Nadu government to take all-out efforts to ensure that the appeal preferred in the Supreme Court against the Madras High Court judgment in the Udumalpet honour killing case is listed for further hearing early.

Ms. Kausalya said Chief Minister M.K. Stalin, when he was in the opposition in 2020, offered support to her and assured her that justice would be rendered. She urged the State government to take necessary steps in this regard.

In 2016, V. Shankar, a Scheduled Caste youth, and Kausalya, a Caste Hindu, were attacked by a gang with lethal weapons in Udumalpet in Tiruppur district after they got married against the wishes of Kausalya’s family.

Shankar succumbed to injuries. A year later, the Principal District and Sessions Court in Tiruppur awarded death sentence to six persons, including B. Chinnasamy, the father of Kausalya, and different jail terms to two other accused.

In 2020, the Madras High Court acquitted the prime accused, Chinnasamy, and commuted the death sentence of five others to life sentence. The Tamil Nadu government preferred an appeal in the Supreme Court against the judgment the same year.

Ms. Kausalya said it was nearly three years since the Supreme Court admitted the criminal appeal preferred by the State, but the appeal was not taken up for further hearing.

Mr. Kathir, executive director of Evidence, a non-governmental organisation fighting for the cause of Dalits, said the State government had to give more attention to the case, which had been pending in the same stage for nearly three years. The government had not taken strong efforts to get the matter listed for further hearing. The seriousness of the case should be considered. Otherwise, it could encourage the offenders, he added.

In a letter sent to the Chief Minister, Ms. Kausalya narrated the horrific incident leading to the death of Shankar and the case before the trial court and the Madras High Court. She urged the Chief Minister to extend support. The government should show special attention and urgency in the case, she said.

வலியை பதிவு செய்தால் வழக்கா?

10.05.2023. | 4th Estate Tamil

சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை… எம்.பி., எம்.எல்.ஏ நிதி கிடைப்பதில்லை…

06.05.2023. | விகடன்

பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் வாக்குமூலம்!

1997-ம் ஆண்டு… ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை மீறி ஊராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் மதுரை மாவட்டம், மேலவளவில் முருகேசன் உள்ளிட்ட பட்டியல் சமூகத்தினர் ஏழு பேர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர். தமிழகத்தையே அதிரவைத்த இந்தக் கொடூரம் நடந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பும், பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலையே இன்னும் தொடர்ந்துவருகிறது.

சமீபத்தில் மதுரையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், 60 பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு, தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை வெளிப்படையாகப் பேசினார்கள். ஒவ்வொருவரும் சொன்ன தகவல்கள் அதிர்ச்சி ரகம்!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஒன்றியம், தேவராயபுரம் ஊராட்சித் தலைவி சுந்தரி, ‘முதல்முறையா எங்க ஊராட்சி, பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனா, மக்கள் ஆதரவோடு வெற்றிபெற்ற என்னை ஆதிக்க சாதியைச் சேர்ந்த துணைத் தலைவர் சுதந்திரமா பணியாற்ற விடுறதில்லை. அலுவலகத்துக்கு வரக் கூடாது, சேர்ல உட்காரக் கூடாதுன்னு தொடர்ந்து பிரச்னை செய்யுறார். இன்னொரு பக்கம், ‘நீ பழங்குடிதானே, உனக்கு ஒண்ணும் தெரியாது. நாங்க சொல்றபடி செஞ்சா போதும்’னு அதிகாரிங்களும் மிரட்டுறாங்க. ஊருக்கு என்ன செய்யணும்னு கஷ்டங்களை அனுபவிச்ச எனக்கு நல்லா தெரியும். ஆனால், எந்த வேலையும் செய்யவிடாம, பொய்யான பெட்டிஷன்களை போட்டு துணைத் தலைவர் எங்களைத் தொந்தரவு செய்கிறார். அவர்கிட்டருந்து எங்களைக் காப்பாத்தினாலே போதும்’’ என்றார்.

மதுரையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டம்

மதுரையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டம்

களக்காடு ஒன்றிய ஊராட்சித் தலைவர் அய்யம்மாள், “ஏற்கெனவே 25 வருடங்களாக ஒரே தலைவர் இருந்த ஊராட்சியில், முதன்முறையாகப் பட்டியலின ஊராட்சித் தலைவராக நான் வந்திருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த முறை அவர்கள் பொறுப்பில் இருந்தபோது ஏகப்பட்ட வீடுகளுக்கு போலி ரசீது போட்டு வரி வசூலித்திருக்கிறார்கள். ‘நீயும் அப்படியே செய்’ என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதை நான் கேட்காததால், எங்கள் ஊருக்கு எந்தத் திட்டத்தையும் ஒதுக்காததோடு, ஆய்வு என்ற பெயரில் அடிக்கடி வந்து தொந்தரவு செய்கிறார்கள்’’ என்றார்.

கடலூர் மாவட்டம், பெரியகுமட்டி ஊராட்சித் தலைவி மரகதம், “அனைத்துக் கட்சியில் இருப்பவர்களும் சாதிரீதியாக ஒன்று சேர்ந்து என்னைச் சுதந்திரமாகச் செயல்படவிடாமல் தடுத்தார்கள். ஊராட்சியைப் பற்றி அவதூறு பரப்பினார்கள். அவர்களின் அழுத்தத்தால் எம்.பி., எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் ஆகியோரும் மேம்பாட்டு நிதிகளை தலித் ஊராட்சிகளுக்கு ஒதுக்குவதில்லை. எந்த நிதியாக இருந்தாலும் சண்டை போட்டு, போராடித்தான் வாங்க வேண்டியிருக்கிறது. பட்டியல் சாதி ஊராட்சிகளுக்கென தனியாக நிதி இருந்தால் இந்தப் பாகுபாடு இருக்காது” என்றார்.

மதுரையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டம்

மதுரையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டம்

இந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்த எவிடென்ஸ் அமைப்பின் இயக்குநர் கதிர் நம்மிடம் பேசியபோது, “தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 114 பட்டியலின ஊராட்சித் தலைவர்களிடம் எவிடென்ஸ் அமைப்பு சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கிடைத்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சிதரக் கூடியவை. கிருஷ்ணகிரி மாவட்டம், தாரவேந்திரம் ஊராட்சித் தலைவர் நரசிம்மமூர்த்தி கற்களாலும் கட்டையாலும் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஊத்துமலை, வேடல், பிரமனூர் ஊராட்சித் தலைவர்கள், அவர்களின் உறவினர்கள் ஆகியோர் ஆதிக்க சாதியினரின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். நான்கு பெண் ஊராட்சித் தலைவர்களுக்கு பாலியல்ரீதியான துன்புறுத்தல்களும் நடைபெற்றிருக்கின்றன.

மதுரை மாவட்டத்தில் பழையூர் பட்டியலின ஊராட்சித் தலைவர் வித்யாவை சாதிரீதியாக இழிவுபடுத்திப் பேசியதோடு, 2021-ம் ஆண்டு தண்ணீர் தொட்டியிலும் மலம் கழித்திருக்கின்றனர். 2022-ம் ஆண்டில் ஊராட்சி மன்ற அலுவலக வாசலிலேயே மலம் கழித்து வைத்திருக்கின்றனர். ஊர் குளியல் தொட்டியில் இதுவரை 15 தடவைக்கும் மேல் மலம் கழித்து, மோசமான முறையில் இழிவுபடுத்தியிருக்கின்றனர். இது குறித்துப் புகார் கொடுத்தும் இதுவரை போலீஸ் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த ஓராண்டில் மட்டும் 12 பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். 11 ஊராட்சித் தலைவர்களை நாற்காலியில் அமரவிடாமல் தடுத்திருக்கிறார்கள். கோயில் திருவிழாக்களில் பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் 45 பேருக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்காத நிலை இருக்கிறது.

சுந்தரி, மரகதம், அய்யம்மாள்,

சுந்தரி, மரகதம், அய்யம்மாள்,

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் எஸ்.சி., எஸ்.டி ஆணைய கண்காணிப்புக் கூட்டங்கள் முறையாக நடப்பதில்லை; அதன் தலைவரான மாவட்ட ஆட்சியர்களே கலந்துகொள்வதில்லை. தமிழக அளவில் இது போன்ற சாதியப் பாகுபாடுகள் குறித்துக் கண்டறிய கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும். பட்டியலின ஊராட்சித் தலைவர்களை தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தடுப்பவர்களை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும். தமிழகம் முழுவதுமுள்ள பட்டியலின ஊராட்சிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும்.

நாங்கள் எடுத்திருக்கும் கள ஆய்வு அடிப்படையில், பாதிக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறார்கள். சமூகநீதி பேசும் தமிழக அரசு, பட்டியலின ஊராட்சித் தலைவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

சமூகநீதியை உரக்கப் பேசும் தி.மு.க ஆட்சியிலாவது இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?!

மலம் கலந்த மர்மம் வேங்கைவயல் தீண்டாமை..நடந்ததும் நடப்பதும்

06-05-2023 | Sathiyam News

Dalit panchayat chiefs say they face administrative oppression

Apr 30, 2023, 08:31 IST | TIMES OF INDIA

Dalit women panchayat presidents seek more support from government, NGOs

April 29, 2023 08:26 pm | THE HINDU

பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குறி வைக்கிறார்கள்: வேங்கைவயல் வேதனை பற்றி எவிடன்ஸ் கதிர்

April 28, 2023 18:56 IST | INDIAN EXPRESS TAMIL

வேங்கைவயல் விஷயத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள், 8 பேரின் டி.என்.ஏ பரிசோதனை எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்து நாங்கள் வழக்கு தொடர்ந்த பிறகு, தற்போது சி.பி.சி.ஐ. டி காவல்துறை 119 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்போது மட்டும் எப்படி 119 என்ற கணக்கு வந்தது என்றுதான் தெரியவில்லை என்று எவிடன்ஸ் கதிர் கேள்வி எழுப்பி உள்ளார்.

2022, டிம்சபர் 24 மற்றும் 25 தேதிகளில் வேங்கைவயலில் வசிக்கும் குழந்தைகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இந்த உடல் நலக்குறைவிற்கு, குடித்த தண்ணீர்தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறியதன் பெயரில், அப்பகுதி இளைஞர்கள் முத்துகிருஷ்ணன், சுதர்சன், முரளிராஜா, தண்ணீர் தொட்டிக்கு மேலே சென்று பார்த்தபோது மலம் கலந்தது தெரியவந்தது. இந்நிலையில் இச்சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக எவிடன்ஸ் கதிரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பாக உரையாடினோம்.

சி.பி.சி.ஐ.டி விசாரணை எப்படி செல்கிறது?

சி.பி.சி.ஐ.டி விசாரணையில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. 11 பேரிடம், டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று சம்மன் அனுப்புகிறார்கள். இதில் 8 பேர் பாதிக்கப்பட்ட தலித் மக்கள். பாதிக்கப்பட்ட 8 பேருக்கு ஆதரவாக, மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்த புகாரில் “ பாதிக்கப்பட்ட மக்களிடமே, டி.என். ஏ பரிசோதனை செய்வது தவறு. டி.என்.ஏ பரிசோதனை தொடர்பான சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். டி.என்.ஏ பரிசோதனை செய்வதன் பின்புலன் தொடர்பாக தெளிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம்.

இந்நிலையில் இந்த வழக்கை தொடர்ந்த பிறகு, 119 பேரிடம் ரத்த மாதிரிகளை சேகரிக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி காவல்துறை கூறியுள்ளது. இப்போது மட்டும் எப்படி 119 பேர் என்ற கணக்கு வந்தது என்று தெரியவில்லை?

டி.என்.ஏ பரிசோதனை ஏன் செய்யப்படுகிறது? இது தொடர்பாக சி.பி. சி.ஐ.டி வெயிட்ட தகவல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்

நீரில் உள்ள மலம் யாருடையது என்பது முக்கியமா? அல்லது மலத்தை யார் கலந்தது என்பதை கண்டறிவது முக்கியமா? என்ற அடிப்படை கேள்வி எழுகிறது. டிசம்பர் 26ம் தேதி மலம் கலந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நாளில் தண்ணீர் தொட்டியை பார்வையிட்ட காவல்துறையினர் மலத்தை எடுத்து பதப்படுத்தவில்லை. தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர்கள், மலம் மற்றும் மலம் கலந்த தண்ணீரை காவேரிநகர் செல்லும் வழியில், சாலையோரமாக உள்ள குப்பைமேட்டில் கொட்டியுள்ளனர். டிசம்பர் 30ம் (கடந்த ஆண்டு) தேதி இரவு 8. 45 மணிக்கு தலித் குடியிருப்புக்கு சென்ற காவல்துறையினர் மலம் எங்கே கொட்டப்பட்டது என்று கேட்டு விசாரித்துள்ளனர். பின்பு குப்பை மேட்டில் கொட்டப்பட்ட மலத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த மலத்தை பரிசோதனை செய்தில் எந்த பலனும் இல்லை.

டி.என்.ஏ பரிசோதனை தொடர்பாக நிபுணர்களிடம் பேசினேன். மற்றும் பல்வேறு வெளிநாட்டு ஆய்வுகளை படித்தேன். மலம் தண்ணீரில் கலந்தாலே, அது யாருடையது என்று கண்டுபிடிப்பது கடினமான ஒன்று. அப்படியே கண்டுபிடித்தாலும், அது துல்லியமாக இருக்குமா ? என்பது கேள்விகுறியே. இந்நிலையில் சம்பவம் நடந்த நாளில்தான் காவல்துறை, இந்த மலத்தை எடுத்து பதப்படுத்தியிருக்க வேண்டும். அப்படி பதப்படுத்தியிருந்தால், அது தொடர்பான விவரத்தை அவர்கள் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் டி.என்.ஏ பரிசோதனையில் பெண், ஆண் மலம் என்ற செய்தியை சி.பி.சி.ஐ.டி காவல்துறை பத்திரிக்கையில் வெளியிடுகிறது. இதன் நோக்கம் என்ன? டி.என்.ஏ பரிசோதனை செய்வதே சாத்தியம் இல்லாத போது, இந்த விவரங்கள் எப்படி கிடைத்தது. இதை அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் மே 6ம் தேதி முதல் விசாரணையை தொடங்குகிறது? இது குறித்து உங்கள் கருத்து?

தலித் மக்கள்தான் குற்றவாளிகள் என்று மீண்டும் வழக்கின் விசாரணையை திருப்புகிறார்கள் என்பது தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பிய பின்பே இந்த உத்தரவு வெளியாகிறது. இந்த ஆணையம் விசாரிக்க எவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பது தெரியவில்லை. பொருத்திருந்து பார்க்கலாம்.

வேங்கைவயல் விவகாரத்தில் ஏதேனும் அழுத்தங்கள் சந்திக்கிறீர்களா?

ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் சிலர், வழக்கின் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க நான் தடையாக இருப்பதாக நினைக்கிறார்கள். மீண்டும் பாதிக்கப்பட்ட தலித் மக்களை அவர்கள் குறிவைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை பாதியில்விட்டுச் செல்ல நான் ஒன்றும் கட்சிக்காரனோ அல்லது அரசு அதிகாரியோ கிடையாது. இறுதிவரை துணையாக இருப்பேன்.

‘Casteist Slurs Hurled’: Dalit Women Panchayat Heads in TN Share Horror Stories

28 Apr 2023, 8:38 AM IST | THE QUINT

ஆணவக்கொலைகான தனிச்சட்டம்!! | “எவிடன்ஸ்” கதிர்

27 Apr 2023 | India Younited

“மனிதக்கழிவு மூலம் DNA-வை கண்டறிவது சாத்தியமற்றது” – எவிடன்ஸ் அமைப்பு இயக்குனர் விளக்கம்

27 Apr 2023 | PuthiyathalaimuraiTV
1 4 5 6 7 8 12